வரலாற்றை, அதைக் கட்டமைத்த ஆதிக்கத் தரப்பிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்தும் ஒருசேர எழுதிப்பார்க்கும் ஒரு விளிம்புநிலை வரலாற்று எழுத்தியலை இந்த நாவல் மிகச்செறிவாக வெளிப்படுத்துகின்றது. இரண்டு எல்லைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கொண்டு நிறைத்திருக்கும் நுட்பம் அலாதியானது. அவள் சிறுமியாக இருந்த காலத்திலிருந்து தனது முப்பத்தாறாம் வயதுவரை கரைகாண முடியாத அந்த வரலாற்று எச்சங்களின் பேரலைகளுக்குள் சிக்கி மூச்சு முட்ட அலைந்து திரிகிறாள். பெண் இல்லாத ஒரு வரலாறு உண்டா? ஆனால் எல்லா வரலாறுகளும் ஆண் வரலாறுகளாகவே எழுதப்பட்டுள்ளன. இங்கே வலிமை நிறைந்த பெண்ணைப் படைத்து நெருக்கடிநிலைக்கால வரலாற்றுக் காலத்துக்குள் உலவவிட்டுள்ளார். அந்தப் பெண்ணின் வீரியத்தைச் சுமந்துவரும் புதிய தலைமுறைப் பெண்ணையும் ஆதிக்க சக்திகளின் கொடுங்கோன்மையைத் தாளாது கொதிக்கும் கதை நாயகியையும் இந்தச் சமூக வரலாற்று எழுத்தில் உயிர்ப்போடு நடமாடவிட்டிருக்கிறார்.
யூதாஸின் நற்செய்தி
- Brand: கே.ஆர்.மீரா, மோ.செந்தில்குமார்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹200
Tags: yudhasin, narseithi, யூதாஸின், நற்செய்தி, கே.ஆர்.மீரா, மோ.செந்தில்குமார், எதிர், வெளியீடு,