• எமகாதக எத்தர்கள்-Yamagathaga Etharkal
வரலாற்றில் நிரந்தரமாகப் பதிந்துவிட்டார்கள் இந்த எமகாதக எத்தர்கள்! நம் கற்பனைக்கு எட்டாத, பிரமிக்கவைக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தி இவர்கள் செய்த தில்லுமுல்லுகள் பிரசித்தமானவை. பொய், சூழ்ச்சி, வஞ்சகம், திருட்டு, ஆள்மாறாட்டம், ஏமாற்று என்று இவர்கள் பயன்படுத்தாத வழி முறைகள் இல்லை. செய்யாத சட்டவிரோதச் செயல்கள் இல்லை.ஒருவர் அமெரிக்காவிலுள்ள சுதந்திர தேவி சிலையை விலை பேசி விற்றிருக்கிறார் என்றால் இன்னொருவர் பாரிஸ் ஈஃபிள் டவரை விற்று முடித்துவிட்டார். மேடிசன் சதுக்கம், புரூக்ளின் பாலம், நியூசிலாந்து ஆர்ட் காலரி என்று தொடங்கி அனைத்தையும் விற்றுத் தீர்த்திருக்கிறார்கள் இந்த எத்தர்கள். கல்லறைகூட இவர்களிடமிருந்து தப்பவில்லை.கள்ள நோட்டு தெரியும்… கள்ள நோட்டு அடிக்கும் இயந்திரம் என்று சொல்லி ஒரு போலி இயந்திரத்தைக் கள்ளத்தனமாக விற்றவர்களைத் தெரியுமா? ஒரே ஒரு பொய் காரணமாக இராக்கைப் போர்க்களமாக மாற்றியவர்களை அறிவீர்களா? மோனாலிசா ஓவியத்தைத் திருடிப் பதுக்கியவர், போலிப் பத்திர மோசடி செய்தவர், இரட்டை உளவாளியாக இருந்தவர், கண்டுபிடிக்கவே முடியாத கார் திருடன் என்று உலகையே ஒரு கலக்கு கலக்கிய மோசடிப் பேர்விழிகளின் நம்பமுடியாத சாகசக் கதைகளை தொகுத்துள்ளார் ஹரி கிருஷ்ணன்.எல்லாமே நிஜத்தில் நடந்தவை!

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

எமகாதக எத்தர்கள்-Yamagathaga Etharkal

  • ₹140


Tags: , சி.ஹரி கிருஷ்ணன், எமகாதக, எத்தர்கள்-Yamagathaga, Etharkal