வஞ்சகமும் ஏமாற்றங்களும் மட்டுமல்லாமல் நம்பிக்கையின்மையும் நம்மைச் சூழ்ந்துள்ள நிலையில், ஒரு மாற்று நம்பிக்கையைத் தருகின்றது இந்த நூல். இந்தியாவின் துணைக்கண்ட மாண்பு எதனால் ஆகிவந்திருக்கிறது? இந்தியாவின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் சவால்கள் உருவாகும் சமயத்தில், இம்மண்ணிலிருந்தே மூலிகையாக எழுகின்ற நம் மக்களின் மாண்பும் களங்கமற்ற பண்புகளும் ஒருமித்த மனோலயத்துடன் நாட்டை வழிநடத்த ஆரம்பித்துவிடுகின்றன. எல்லா சமயங்களோடும் கலந்துருவான ஓர் ஆன்மா, சன்மார்க்க ஒளியை ஏந்தியபடி நம்மைச் சூழ முயலும் அகவிருளை முழுமையாகக் கரைக்கிறது. இந்த அதிசயம் நிகழும் விதம் என்ன என்றறிவதற்காக நாடு முழுவதும் சுற்றித் திரிந்த நூலாசிரியர், தன் அனுபவங்களை நம் அனுபவங்களாக நமக்கு மாற்றித் தருகிறார். ஒரே மண்ணின் பல மொழிகளும் பாமர மனங்களில் ஊடுருவி ஓர் இசைக் கோவையாக எழும் அற்புதத்தின் பெயரே ‘வாழும் நல்லிணக்கம்.’
Vazhum Nallinakkam (Ariyappadatha Indiavaithedi Oru payanam)
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹300
Tags: Vazhum Nallinakkam (Ariyappadatha Indiavaithedi Oru payanam), 300, காலச்சுவடு, பதிப்பகம்,