வள்ளுவன் எனும் சாதி தமிழகத்தின் மிகப் பழமையான சாதிகளுள் ஒன்று. போகர் சித்தர் தனது போகர் ஏழாயிரம் என்ற நூலில் அவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் இருந்த சாதிகளின் பெயர்களை பட்டியலிட்டு உள்ளார். அச்சாதிகளில் வள்ளுவன் சாதியையும் குறிப்பிட்டிருக்கிறார். திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் வள்ளுவன் சாதியில் தோன்றியவர் என்பதாலும், அவரது இயற்பெயர் அறியமுடியவில்லை என்பதாலும், அவர் தமது சாதிப் பெயரான வள்ளுவன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
வள்ளுவன் சாதியில் சிவ கோத்திரத்தார் வகையினர் தங்களது வள்ளுவன் சாதி ஐந்து சகோதரர்களைக் கொண்டு உருவானதாக தங்களது முன்னோர்களால் வழிவழியாக சொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். அதன் படி சகோதரர்களில் முதலாமவர் கச்சக் குலாவன், இரண்டாமவர் காக்ய நாய்க்கன், மூன்றாமவர் ஓடிவந்த செல்வன், நான்காமவர் பாலவராயன், ஐந்தாமவர் கூவம் சம்பந்தன். இந்த ஐந்து முன்னோர்களால் உருவாக்கப்பட்ட இச்சாதியில் இவ்வைந்து பெயர்களே தலைமை கோத்திரங்களாக இருக்கின்றன. மற்றவை கிளைக் கோத்திரங்கள். மற்ற சாதியினரைப் போன்றே இவர்களும் ஒரே கோத்திரத்தில் பெண் கொடுப்பது எடுப்பது இல்லை. இவர்கள் தங்களை நாயனார் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். நாயனார் என்பது இச்சாதியினருக்கான பட்டம் என்று சொல்லப் படுகிறது. திருவள்ளுவர் நாயனார் என்று குறிப்பிடப்படுவதால் இவர்களும் தங்களை நாயனார் என்று அழைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.
வழி வழி வள்ளுவர் - Vazhi Vazhi Valluvar
- Brand: ரா.பி. சேதுப்பிள்ளை
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹30
Tags: vazhi, vazhi, valluvar, வழி, வழி, வள்ளுவர், , -, Vazhi, Vazhi, Valluvar, ரா.பி. சேதுப்பிள்ளை, சீதை, பதிப்பகம்