• The Obstacle is the way
இவ்வுலகில் வாழ்ந்த மாபெரும் மனிதர்களிடம் அசாதாரணமான அதிர்ஷ்டமோ, திறமையோ அல்லது அனுபவமோ இருக்கவில்லை. அவர்கள் செய்ததெல்லாம், ஒரே ஒரு மெய்யுரையின்படி வாழ்ந்தது மட்டும்தான். அந்த மெய்யுரை இதுதான்: ‘உங்கள் வழியில் குறுக்கே நிற்பது உங்களுக்கான வழியாக மாறுகிறது.’ இந்த எளிய கொள்கையைச் சுற்றி உருவாக்கப்பட்டத் தத்துவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. அது கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து, போர்களிலும் பெருநிறுவன ஆலோசனைக்கூடங்களிலும் அது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மறக்கப்பட்டுவிட்ட இந்த வெற்றிச் சூத்திரத்தை, உலகப் புகழ் பெற்ற நூலாசிரியரான ரயன் ஹாலிடே, இன்றைய உலகிற்குப் பொருந்துகின்ற விதத்தில் வேறு விதமாக மாற்றியமைத்துள்ளார். இந்நூலில் அவர் வெளிப்படுத்துகின்ற விஷயங்களில் இவையும் அடங்கும்: ஜான் டி. ராக்கஃபெல்லர், பாதகமான சூழல்களில்கூட வாய்ப்புகளைக் கண்டுகொண்டு, பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்ட ஒரு காலகட்டத்தில் எவ்வாறு பெரும் பணத்தைக் குவித்தார்? மகாத்மா காந்தி தன்னுடைய பலவீனங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஆங்கிலேயப் பேரரசின் வலிமை வாய்ந்த இராணுவத்தை எவ்வாறு அதற்கு எதிராகவே திருப்பினார்? ஸ்டீவ் ஜாப்ஸ் எவ்வாறு சாத்தியமற்றதைச் சாத்தியமாக்கினார்? உங்களுடைய கண்ணோட்டங்களை முறையாகக் கையாளுங்கள். விஷயங்களை மாற்றுவதற்கு எழும் வாய்ப்புகளை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். ஒவ்வொரு தடையையும் உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

The Obstacle is the way

  • ₹350


Tags: the, obstacle, is, the, way, The, Obstacle, is, the, way, Ryan Holiday (Author) PSV Kumarasamy (Translator), மஞ்சுள், பப்ளிசிங், ஹவுஸ்