• The Archer
ஞானத்தைத் தேடி ஒரு முதியவரை நாடி வருகின்ற ஓர் இளைஞனையும், தன் தேடலின் ஊடாக அவன் கற்றுக் கொள்கின்ற பாடங்களையும் பற்றிய உத்வேகமூட்டும் ஒரு கதை இது! இந்நூலில் நாம் சந்திக்கவிருக்கின்ற தெட்சுயா, ஒரு காலத்தில் தன்னுடைய வில் வித்தைக்குப் புகழ் பெற்றவராக இருந்து, பிறகு பொது வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக ஓய்வு பெற்றுள்ளவர். பல கேள்விகளைச் சுமந்து கொண்டு ஓர் இளைஞன் அவரைத் தேடி வருகிறான். அக்கேள்விகளுக்கு பதிலளிப்பதன் வாயிலாக, வில் வித்தையின் நுணுக்கங்களையும் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கைக்கான அறநெறிகளையும் தெட்சுயா அவனுக்கு விளக்குகிறார். செயலுக்கும் ஆன்மாவுக்கும் இடையே ஒரு பிணைப்பு இல்லாமல் வாழ்வது மனநிறைவு தராது, நிராகரிப்பு குறித்த பயத்தாலும் தோல்வி குறித்த பயத்தாலும் மட்டுப்படுத்தப்படுகின்ற ஒரு வாழ்க்கையை வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை; மாறாக, ஒருவர் சவாலான காரியங்களில் இறங்க வேண்டும், தன்னிடம் துணிச்சலை வளர்த்துக் கொள்ள வேண்டும், நம்முடைய தலைவிதி நமக்கு வழங்குகின்ற எதிர்பாராத பயணத்தை நாம் சுவீகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே இக்கதையின் சாராம்சமாகும். மகிழ்ச்சியையும் மனநிறைவையும் உள்ளடக்கிய ஒரு வாழ்க்கைக்கான அடித்தளத்தைப் பாலோ கொயலோ இந்நூலில் நமக்கு வழங்கியுள்ளார். கடின உழைப்பு, ஆழ்விருப்பம், குறிக்கோள், அக்கறையுணர்வு, தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கு, ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதற்கான தூண்டுதல் ஆகியவையே அந்த அடித்தளம் என்று அவர் வலியுறுத்துகிறார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

The Archer

  • Brand: Paulo Coelho
  • Product Code: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
  • Availability: In Stock
  • ₹250


Tags: the, archer, The, Archer, Paulo Coelho, மஞ்சுள், பப்ளிசிங், ஹவுஸ்