இன்றளவும்கூட தொழுநோய் என்றாலே அஞ்சுபவர்களும் அஞ்சி ஒதுங்குபவர்களும்தான் அதிகம். இது முற்றிலும் தேவையற்றது. இந்நூலாசிரியர் பேரா. ந.பழனி சிறுவயதிலேயே தொழுநோயால் பாதிக்கப்-பட்டு, அந்நோயின் கஷ்டநஷ்டங்களை உணர்ந்தவர். அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டெழுந்தவரும்கூட. ஆனால் அத்துடன் நின்றுவிடாமல் தன் வாழ்நாள் முழுவதையும் தொழு-நோயாளிகளுக்குச் சேவையாற்ற அர்ப்பணித்துக் கொண்டவர் என்பதுதான் முக்கியம். இயன்முறை மருத்துவம் பயின்ற ந.பழனி, உலகப் புகழ் பெற்ற தொழுநோய் மருத்துவரான டாக்டர். பால் பிராண்டுடன் இணைந்து பல புதிய சிகிச்சை முறைகளைக் கண்டறிந்தார். அவற்றைத் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பரீட்சித்துப் பார்த்து வெற்றியும் கண்டார். இந்த அனுபவங்களை அவர் படிப்படியாக விவரிக்கும்போது மனம் நெகிழ்ந்துபோகிறது.வினோபாபாவே, பாபா ஆம்டே போன்ற தியாகசீலர்களுடன் இணைந்து பணியாற்றியவர் ந.பழனி. இந்தப் புத்தகத்தில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு தகவல்களைத் தருவதோடு அதற்கான சிசிக்சை முறைகளையும் பிசியோதெரபி பயிற்சிகளையும் விவரித்திருக்கிறார்.சின்னச் சின்ன துன்பங்களுக்கே துவண்டு போகிறவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால் மலையளவு நம்பிக்கையையும் மகத்தான சக்தியையும் பெறுவார்கள். தடைக்கல் என்பது அஞ்சி நடுங்கவேண்டி ஒன்றல்ல, தாண்டிக் குதித்து வெற்றி பெறுவதற்கானது என்பதைத் தன் வாழ்வின் மூலம் அற்புதமாக உணர்த்தியிருக்கிறார் நூலாசிரியர். படியுங்கள், பலன் பெறுங்கள்.*ஆசிரியர் குறிப்பு: பேராசிரியர் ந.பழனி அவர்கள் சர்வதேசஅளவில் புகழ் பெற்ற இயன்முறை மருத்துவர் ஆவார். வேலூர் CMC மருத்துவமனையில் இயன்முறை மருத்துவக்கல்வி பயிற்சியின் தலைமைப் பொறுப்பினை வகித்து வந்தார். அத்துடன், டாக்டர். பால் பிராண்டுடன் இணைந்து தொழுநோய் ஆய்வு பயிற்சி மேற்கொண்டதன் மூலம் தொழுநோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிய ஆய்வுப் பணியை மேற்கொண்டார். இவர் தற்சமயம் புகழ்பெற்ற சேலம் விநாயகாமிஷன்ஸ் கல்லூரியின் இயன்முறை மருத்துவ இயக்குநராகப் பணிபுரிவதுடன், இயன்முறை மருத்துவக் கல்வியை மேம்படுத்தும் வகையில் பயிற்சியாளராகவும் இருந்துவருகிறார். இவர் பணிμத் ஜோதி விருது பெற்றுள்ளார். 2002-ல் சர்வதேசபதிப்பக நிலையத்தால் (International Publishing House) வழங்கப்பட்ட சிறந்த இந்திய குடிமகனுக்கான விருது திரு.வாஜ்பாய் மற்றும் மன்மோகன்சிங் போன்றவர்களுடன் இவருக்கும் வழங்கப்பட்டது. இந்தியன் இயன்முறை மருத்துவர் கூட்டமைப்பு 1990ல் இவருக்கு முக்கிய Fellowship விருதை அளித்து கௌரவித்தது. இந்தியன் அசோசியேஷன் ஆஃப் பிசியோதெரபிஸ்ட் அமைப்பு 1990-2015இல் வாழ்நாள் சாதனையாளர் விருதை இவருக்கு அளித்துள்ளது.
தடைக்கல்லே படிக்கல்-Thadaikalle Padikkal
- Brand: ந. பழனி
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90
Tags: , ந. பழனி, தடைக்கல்லே, படிக்கல்-Thadaikalle, Padikkal