1920-ஆம் ஆண்டு காந்தியின் தலைமையில் நாடு ஒத்துழையாமை இயக்கத்தை தழுவியது. இப்போராட்டம் சத்தியம், அகிம்சை, சாத்வீக எதிர்ப்பு என்ற அடிப்படையில் அமைந்ததால் காந்தியடிகள் பெண்கள் கலந்து கொள்வதை விரும்பினார். பெண்கள், காங்கிரஸ் திட்டங்களான அந்நியத் துணிகளைப் புறக்கணித்தல், அத்துணிக் கடைகள் மற்றும் மதுபானக்கடைகள் இவற்றை மறியல் செய்தல், கதர் துணி நெய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். ஒத்துழையாமை இயக்கத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது மதுபான கடைகள் மறியலாகும். இப்போராட்டத்தை ஈரோட்டைச் சேர்ந்த ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முன்னின்று நடத்தினார். போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சென்னை அரசு அவரையும் மற்றும் பல தொண்டர்களையும் கைது செய்து சிறையிலடைத்தது. பின் அவர் மனைவி நாகம்மாளும், அவர் சகோதரி கண்ணம்மாளும் போராட்டத்தை ஈரோட்டில் தொடர்ந்து நடத்தினர். இப்போராட்டத்தை நிறுத்திவிடலாமா என்று காங்கிரஸார் காந்தியடிகளிடம் கேட்டபோது, அவர் "கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்தி விடுவது என்பது என் கையில் இல்லை, அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் தான் இருக்கிறது" என்று பதிலளிக்குமளவுக்கு இப்பெண்மணிகள் தீவிரமாக ஈடுபட்டனர். கதராடை உடுத்தினர். ஈ.வே.ரா தமது 80 வயது தாயாரையும் கதர் உடுத்தச்செய்தார்.
தமிழகப் பெண்மணிகள் - Tamizhaga Penmanigal
- Brand: ரா.பி. சேதுப்பிள்ளை
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹30
Tags: tamizhaga, penmanigal, தமிழகப், பெண்மணிகள், , -, Tamizhaga, Penmanigal, ரா.பி. சேதுப்பிள்ளை, சீதை, பதிப்பகம்