சேற்றில் மலர்ந்த செந்தாமரை மேனகா. வறுமையில் வாழ நேர்ந்தாலும் தன்மானம் மிகுந்தவள். தாயின் வாழ்க்கையில் ஏற்பட்ட தடுமாற்றத்தின் காரணமாக சமுதாயம் அவர்களை மதிப்புக் குறைவாக நடத்துகிறது. பாட்டி மங்களம், பேத்திகள் இரண்டு பேரையும், மகளையும் பாடுபட்டுக் காப்பாற்றி வருகிறாள். மேனகா எதிர்பாராதவிதமாக நடிகையாகி விடுகிறாள்.
ஹரிகிருஷ்ணாவை அவள் விரும்பினாலும் அவன் வாழ்க்கையில் தனக்கு இடமில்லை என்பதை உணர்ந்து அவனைத் தன் மனதிலேயே வைத்துப் போற்றுகிறாள். ரேகாவுக்கும் ஹரிகிருஷ்ணாவுக்கும் திருமணம் நடக்கிறது. ரேகாவின் சுபாவம் ஹரிகிருஷ்ணாவின் வாழ்க்கையையும் அவனது இலட்சியத்தையும் சிதறடித்து விடுகிறது.
மேனகா திரை உலகில் பிரபலம் ஆன பிறகு அவள் தந்தை சொந்தம் கொண்டாடிக்கொண்டு அவர்கள் வீட்டுக்கு வந்து போகிறார். மேனகாவுக்கு இதில் விருப்பம் இல்லாத போதும் தாயின் வேண்டுகோளுக்குப் பணிந்து போகிறாள்.
ரேகாவைக் கொலை செய்ததாக ஹரிகிருஷ்ணாவின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. மேனகா மற்றும் ஹரிகிருஷ்ணா வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை, திருப்பங்களைப் படிக்கும்போது அந்தக் காட்சிகள் நம் கண்ணெதிரே நடப்பது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. விறுவிறுப்பான இந்தக் கதையின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை யாரும் சுலபமாக ஊகிக்க முடியாத வகையில் நகர்த்திச் செல்கிறார் எழுத்தாளர்.
பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனாராணி அவர்களின் படைப்பான "Neeraajanam" தமிழில் "சொப்பன சுந்தரி" யாக வாசகர்களின் கையில்.
சொப்பன சுந்தரி
- Brand: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபாகரன்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
-
₹299
Tags: swapna, sundhari, சொப்பன, சுந்தரி, யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபாகரன், வானவில், புத்தகாலயம்