தீயவை நிகழ்த்தப்படும்போது எங்ருந்தோ பறந்து வந்து, சாகசங்கள் செய்து,
தீய சக்தியை வீழ்த்தி, ஆபத்திலிருப்பவர்களைக் காப்பாற்றுவது காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களின் வழமை. இந்தப் புத்தகத்தில் நீங்கள் சந்திக்கப்போகும் மனிதர்களும் Super Heroes / Super Sheroes - தாம் ஆனால், இவர்களுக்கு பறக்கும் சக்தி கிடையாது. இவர்களிடம் அபூர்வமான ஆயுதங்கள் கிடையாது. அடையாள உடை கிடையாது. இவர்களிடம் எந்தவொரு விசேஷ அம்சமும் கிடையாது. அவ்வளவு ஏன், மார்வெலும் DC-ம் இவர்களைச் சீண்டப்போவதே கிடையாது ஆனால்...
இவர்கள் யாரும் கற்பனை கிடையாது. நம்ேமாடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் சக மனிதர்கள். சாதாரண மனிதர்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமும் அசாதாரணக் கதைகள் உண்டு.
உயிர்க் கொல்லி நோயின் பிடியில் இருந்து மீண்டு உலக சாம்பியன் ஆக முடியுமா? எதற்கோ சாகத் துணிபவர்களைக் காப்பாற்ற, தன் உயிரை தினம் தினம் பணயம் வைக்க முடியுமா? சாவுக்கான தேதி குறிக்கப்பட்ட பிறகு ஏழு சிகரங்களையும் தொட முடியுமா? விபத்தினால் வீல் சேர்தான் வாழ்க்கை என்றான பிறகு சாதனைகளால் விஸ்வரூபம் எடுக்க முடியுமா? தெரு நாய்களின் பசிக்காக குப்பை பொறுக்கிச் சம்பாதிக்க முடியுமா? அழிந்து வரும் பெயர் தெரியாத மொழிகளுக்காக ஆயுளையே செலவு செய்ய முடியமா? யானைக்கும் மனிதனுக்குமான பிணக்குகளைத் தீர்க்க தன் வாழ்வையே அடமானம் வைக்க முடியுமா?
‘முடியும்’ என்று களத்தில் நிற்பதால்தான் இவர்கள் ‘நம்முடன் வாழும் சூப்பர் ஹீரோக்கள்’ ஆகியிருக்கிறார்கள். நிச்சயம், இவர்களுடைய வாழ்க்கை, நம் மனங்களில் ஏற்படுத்தப் போகும் மாற்றம் என்பதும் அசாதாரணமானதே!
Tags: super, heroes, சூப்பர், ஹீரோஸ், முகில், வானவில், புத்தகாலயம்