• Sixer Nirvaga Uththigal / சிக்சர் நிர்வாக உத்திகள்
உலகமே முடங்கிப்போய், நம் வேலை என்னாகும் என்று பலரும் கலக்கத்தில் இருந்த காலத்தில், வேலை கிடக்கட்டும், உயிர் பிழைத்திருந்தாலே பெரிது என எண்ணற்றோர் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த நேரத்தில், மருத்துவம் போன்ற வேறு சில துறைகளும் தேவைகளின் காரணமாக பெரும் வளர்ச்சி வாய்ப்பைப் பெற்றன. அவற்றில் ஒன்று மருத்துவக் காப்பீட்டுத் துறை. அப்படிப்பட்ட வாய்ப்பைப் பெற்றவர்களிடையே உரை நிகழ்த்தும் போது சோம. வள்ளியப்பன் சொன்ன அறிவுரை, ‘இப்போதுதான் நீங்கள் உங்கள் முயற்சியைப் பன்மடங்காக்கவேண்டும்’. சிறப்பான வாய்ப்பிருக்கும் காலத்தில் அதுவாக வியாபாரமாகும் நேரத்தில் சின்ன முயற்சியே போதுமே என்றுதான் பலருக்கும் தோன்றும். நூலாசிரியர் ‘சொன்ன காரணம் மறுக்கவே முடியாதது; பலருக்கும் தோன்றாதது. BHEL போன்ற பெரிய பொதுத்துறை நிறுவனம், பெப்சிகோ, வேர்ல்பூல் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சில தனியார் நிறுவனங்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியது தவிர, டெய்ம்லர் பென்ஸ், செயிண்ட் கோபேன், ஏசியன் பெயிண்ட்ஸ், BMW, JCB, நியுவெல் ரெனால்ட்ஸ், AMM International போன்ற பல நிறுவனங்களில் பயிற்சி கொடுத்தவர் டாக்டர் சோம. வள்ளியப்பன். டோயன்சிஸ், கிறிஸ்டல் டெல்டா உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். நிறுவனங்களில் பொறுப்புகளில் இருப்பவர்களும், சிறு பெரு நிறுவனங்களை நிர்வகிப்பவர்களும் புரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு பயன்தரும் உத்திகளை எளிமையாக எழுதியிருக்கும் புத்தகம், ‘சிக்ஸர்: நிர்வாக உத்திகள்’.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Sixer Nirvaga Uththigal / சிக்சர் நிர்வாக உத்திகள்

  • ₹150


Tags: , சோம. வள்ளியப்பன், Sixer, Nirvaga, Uththigal, /, சிக்சர், நிர்வாக, உத்திகள்