காசி : வட இந்தியாவில் அமைந்துள்ள மிகப் புண்ணிய சில க்ஷேத்ரம். காசியை வலம் வந்தால் பூமியைப் பிரதக்ஷிணம் செய்த புண்ணியத்தின் பலனைப் பெறலாம். கங்கையில் புனித நீராடினால் சப்த சமுத்திரத்தில் ஸ்நாநம் செய்த பாக்கியம் பெறலாம்.
திருவண்ணாமலை : வட ஆற்காடு மாவட்டடத்தில் அமைந்துள்ள ஒரு திவ்ய க்ஷேத்ரம். இம்மலையில் கிரிவலம் முக்கியமான தொன்றாகும். கிரிபிரதக்ஷிணத்தில் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் ஆயிரம் அசுவமேதயாகம் செய்த பலனைத் தருகிறது. கிரி வலத்துக்கு ஏற்ற மாதங்கள் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகியனவாகும்.
வைத்தீஸ்வரன் கோவில் : மயிலாடுதுறை - சீர்காழி செல்லும் மார்க்கத்தில் 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரசாதமாக தரும் மருந்து உருண்டை நோய் தீர்க்கும் ஒரு சஞ்சீவியாகும். பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் வைத்தியநாத சுவாமி நமக்கு கிடைத்த சஞ்சீவிமலையாவார்!