• சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை
பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டு, ஊடகங்களின் குரல் அதிகாரத்தால் அடக்கி வைக்கப்பட்டிருந்த காலத்தில், வானொலி தொகுப்பாளினி சின்ரன் , அந்தத் தடைகளை மீறி , சீனப் பெண்களின் ஆழ்மனக் குமுறல்களை தன் நிகழ்ச்சியின் வாயிலாக வெளிப்படுத்தினார்.சீனாவில் ஆட்சியில் இருந்த கட்சித் தலைவரின் மனைவிகள், நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் வசிக்கும் ஏழை விவசாயியின் மனைவி என சமூகத்தின் பல நிலைகளிலும் வசிக்கும் பெண்கள் சின்ரனிடம் நாம் கற்பனை செய்தும் பார்க்கவியலாத தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மனம் விட்டுப் பேசியுள்ளனர். அவர்கள் பேசிய வாழ்க்கைப் பதிவுகள், தங்களுக்கு நேர்ந்த கட்டாயத் திருமணம் பற்றி , அரசியல் சூழல் மாற்றத்தால் பிரிக்கப்பட்ட அவர்கள் குடும்பங்கள் பற்றி, அரசியல் சூறையாடிய வாழ்வின் அவலங்கள் பற்றி, பாலியல் வன்புணர்வு , காதல் என சீனாவில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.இக்காரணங்களால் இப்புத்தகம் சீனாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது . ஆனால் அரசியல் அதிகாரம் தந்த நெருக்கடிகளால் சின்ரன் சீனாவில் இருந்து வெளியேறி தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

  • ₹280


Tags: seena, pengal, sollapadaatha, kathai, சீனப், பெண்கள், சொல்லப்படாத, கதை, ஜி. விஜயபத்மா, எதிர், வெளியீடு,