இவளைத் தெய்வமாய் வணங்கும் காமம் கடந்த ஒரு உலகம். ஆம் ஆண்கள், பெண்கள் என நம் பூவுலகைப் போல் வாழும் மனிதர்களுக்கு காமம் குறித்தான உணர்வுகள் துளி கூட இல்லை. அது எப்படிச் சாத்தியம்...? அப்படியான ஒரு உலகத்தை உருவாக்கி, ஆச்சார்யா உருளியாரின் அறிவுரைகளைக் கேட்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறாள் அழகு ராணி சில்வியா. காமமே இல்லை பின் எப்படி சந்ததி தொடரும்...? ஒரு கட்டத்தில் சந்ததி இல்லாத அந்த உலகமே இல்லாமல் போய் விடாதா...? எதற்காக அப்படியானதொரு உலகம்..? என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை... ஏனென்றால் அங்கும் குழந்தைகள் பிறக்கின்றன... அதற்கென தனியே ஒரு இடம்... அதுதான் மதலைக் கூடம். அதில் எப்போதும் காமமும் பிரசவமும்தான்... சுருக்கமாகச் சொன்னால் மனித உற்பத்தித் தொழிற்சாலை. அதைப் பராமரிக்கும், பாதுகாக்கும் கூடு விட்டு கூடு பாயும் திறமை கொண்ட, உயிரை ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்குச் செலுத்தும் ஆற்றல் கொண்ட திமிலன்... அவனுக்கு உதவியாய் அதிரனும் மற்றும் சிலரும்.
Tags: rubini, ருபினி-Rubini, தெரிசை சிவா, வம்சி, பதிப்பகம்