பழங்கால உலகைப் பற்றி அறியப்பட்ட பெரும்பாலானவை பழங்காலத்து வரலாற்றாளர்களின் சொந்தப் பதிவுகளில் இருந்து வருகின்றன. ஒவ்வொரு பண்டைய ஆசிரியரின் ஒருதலைபட்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வது முக்கியம் என்றாலும், அவர்களின் பதிவுகள் பண்டைய கடந்த காலத்தை பற்றிய நமது புரிதலுக்கு அடிப்படையாகும். ஹெரோடோடஸ், துசி டைடஸ், அரியன், புளுடார்ச், பாலிபியஸ், சிமா கியான், சல்லுஸ்ட், லிவி, யோசபஸ், சுயேடோனியஸ் மற்றும் டாசிடஸ் ஆகியோர் மிகக் குறிப்பிடத்தகுந்த பண்டைய எழுத்தாளர்களில் சிலராவர்.
பண்டைய வரலாற்றை படிக்கும் ஒரு அடிப்படை சிரமம், பதிவு செய்யப்பட்ட வரலாறு மனித நிகழ்வுகளின் முழுமையையும் ஆவணப்படுத்த முடியாது. அந்த ஆவணங்களின் ஒரு பகுதி மட்டுமே இன்றைய தினம் கிடைக்கப்பெறுகின்றன.[22] மேலும், இந்த கிடைக்கப்பெறும் பதிவுகளில் இருந்து பெறப்பட்ட தகவலின் நம்பகத்தன்மை கருதப்பட வேண்டும்.[22][23] சிலரே வரலாறுகளை எழுதுவதற்கு திறன் பெற்றவர்களாக இருந்தனர். ஏனெனில் பண்டைய வரலாற்றின் முடிவிற்குப் பிறகு நீண்ட காலம் வரை கல்வியறிவு கிட்டத்தட்ட எந்த கலாச்சாரத்திலும் பரவலாக இல்லை
Tags: roma, rajyam, ரோம, ராஜ்யம், , -, Roma, Rajyam, உதயணன், சீதை, பதிப்பகம்