காலை முதல் சுறுசுறுப்பாய் இயங்கிய வீதிவிறைப்பு அடங்குகிற மதியப் பொழுது, சத்தமில்லாமல் அடங்கி விட்ட வீடுகளும், மௌனத்தின் குகைபோல் நீண்டு கிடக்கும் வீதியும், கொஞ்சம் தலைசாய்க்க அனுமதித்தன.
இமைகள் வலுக்கட்டாயமாகப் பிரித்து, எதிரேயும், சுற்று முற்றும் பார்த்தாள். எவரும் இல்லை.
கீழ்வீடு காலியாக இருந்தது. நல்ல வாடகை, திகைகிற வரை வீட்டுக்காரர் வாடகைக்கு விடப்போவதில்லை. செண்பக தேவியிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்திருந்தார். வீடு பார்க்க வருகிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தடவையும் அவள் வீட்டைத் திறந்த காட்டவேண்டும்.
"இதோ வர்றேன்"
எழுந்து வீடு காட்டுவதற்காக கையில் சாவியை எடுத்துக்கொண்டு கீழிறங்கினாள்.
கீழ்வீட்டுக்கு ஒரு அழைப்பு மணியும், மேல் வீட்டுக்கு ஒன்றும் தனித்தனியாக இருந்தன. அம்புக் குறியிடப்பட்டிருப்பதைப் பார்த்து, வலது பக்க அழைப்பு மணியை அழுத்தியிருக்க வேண்டும்.
அழைப்பு மணிக்கு பதில் அவரே குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்
புதுமாப்பிள்ளை சொந்தவீடு (நாடகங்கள்) - Puthumaapillai Sonthaveedu Naadagangal
- Brand: T.N. மாரியப்பன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹35
Tags: puthumaapillai, sonthaveedu, naadagangal, புதுமாப்பிள்ளை, சொந்தவீடு, (நாடகங்கள்), , -, Puthumaapillai, Sonthaveedu, Naadagangal, T.N. மாரியப்பன், சீதை, பதிப்பகம்