• பொசிஷனிங்
உங்களை... உங்கள் தொழிலை... உங்கள் திறமையை... உங்கள் தயாரிப்பை... அடுத்தவர்கள் ரசிக்க... விரும்ப... வரவேற்க... அங்கீகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியது என்ன? உங்களை நீங்களே முன்னிறுத்துவதுதான். நிர்வாகவியலில் இந்த உத்திக்கு 'பொசிஷனிங்' என்று பெயர். இதன்மூலம் உங்களைப் பற்றி உயர்வான, சாதகமான பிம்பத்தை அடுத்தவர் மனங்களில் உருவாக்க முடியும். ரஸ்னா நடத்திய நாடகம், உஜாலா பயன்படுத்திய உத்தி, காட்பரீஸ் காட்டிய வழி என்று மெய்யான அனுபவங்களின் வழியாக பொசிஷனிங் உத்தியை கற்று தருகிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி. எஸ்.எல்.வி.மூர்த்தி: தமிழ் மேனேஜ்மென்ட் எழுத்துகளின் முன்னோடி. சொந்த ஊர் நாகர்கோயில்.சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் படித்துவிட்டு அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்டில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர். கிரைண்ட்வெல் நார்ட்டன் கம்பனியின் பெங்களுரு தொழிற்சாலையின் சேல்ஸ் மேனேஜராகப் பணியாற்றியபோது, ஏற்றுமதியில் சாதனை படைத்து மத்திய அரசின் பரிசை வாங்கித் தந்தார். 'மூர்த்தி மார்க்கெட்டிங் அசோசியேட்ஸ் ' நிறுவனத்தை நடத்தி வருகிறார். வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கு உதவிக் கரம், மேனேஜ்மென்ட் ஆலோசனை, பயிற்சிப் பணிகள் என பல பாதைகளில் இவர் பயணம் தொடர்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பொசிஷனிங்

  • ₹160


Tags: positioning, பொசிஷனிங், எஸ்.எல்.வி.மூர்த்தி, Sixthsense, Publications