ஜேம்ஸ் டைலர் கெண்ட் (1849 – 1916) வட அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டென்பென் மாவட்டத்திலுள்ள வுதல் (Woodhul) நகரில் 31.03.1849 அன்று பிறந்தார். இந்த மார்ச் 2016 உடன் அவர் பிறந்து நூற்று அறுபத்தேழு ஆண்டுகளாகின்றன. அவருடைய தந்தை ஸ்டீஃபன் கெண்ட். தாய் கரோலின். கெண்ட் பிராட்ஸ்பர்கிலுள்ள ஃபிராங்க்ளின் பள்ளியில் தொடக்கக் கல்வியும் வுதல் கல்விக் கழகத்தில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பும் முடித்தார். மேல் படிப்பை நியூயார்க் மாநிலத்திலுள்ள மாடிசன் பல்கலைக்கழகத்தில் (இப்போது கோல்கேட் என்றழைக்கப்படுகிறது) பட்டம் பெற்றார். ஓகியோவைச் சேர்ந்த சின்சினாட்டியிலுள்ள எக்லெக்டிக் (Eclectic எல்லாப் புலங்களிலுள்ள சிறந்தவற்றை ஏற்றல்) மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். 1871 இல் பட்டம் பெற்றார். 1868இல் பிஎச்.பி (Ph.b) பட்டம் பெற்றார். பின்பு மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1874இல் செயிண்ட் லூயிக்குக் குடிபெயர்ந்தார். மிசெளரியில் உள்ள புனித லூயி மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவ நடைமுறைப் பணிபுரிந்தார்.
பொருட்பண்பியல் - Porutpanbiyal
- Brand: ச. செல்வக்குமார்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹35
Tags: porutpanbiyal, பொருட்பண்பியல், , -, Porutpanbiyal, ச. செல்வக்குமார், சீதை, பதிப்பகம்