சங்க இலக்கியப் பிரதிகள் , புதிதாகக் கண்டறியப்படும் தரவுகள் சார்ந்து,புதிது புதிதான ஆய்வு முறையியலுக்கு உட்படுத்தக்கூடிய தன்மைகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில் அண்மைக்காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள், கல்வெட்டுச்செய்திகள் ஆகிய பிறவற்றைப் பயன்படுத்தி, புதிய முறையியலில்சங்கப்பிரதிகளைக் கணியன்பாலன் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரையான தமிழ் மொழி பேசுவோர் மற்றும் அம்மக்களின் வாழ்விடம் ஆகியவை குறித்த நம்பகத்தன்மை சார்ந்த ஆய்வுகள் காலந்தோறும் நிகழ்த்தப்பட்டு வருவதைக் காண்கிறோம். அத்தொடர்ச்சியின் ஒரு கண்ணியாக இந்நூல் அமைகிறது.
கணம், யுகம் மற்றும் இனக்குழு சார்ந்த முறையியலில் பண்டையத் தமிழ்ச்சமூகம் குறித்த விரிவான ஆய்வுகள் இல்லை. மார்கன், ஏங்கெல்ஸ், டாங்கே ஆகியோர் இத்துறையில் மேற்கொண்ட ஆய்வுமுறைகளைத் தமிழ்ச் சமூக ஆய்வுக்கு பொருத்திப் பார்க்கும் ஆய்வை இந்நூல் கைக்கொண்டிருப்பதைக் காண்கிறோம்.பிரித்தானிய ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள இந்திய வரலாறு தொடர்பான பல்வேறு தகவல்களையும், தமிழக வரலாற்றைக் கட்டமைப்பதற்கு இந்நூல் பயன்படுத்தியுள்ளது. இதன்மூலம் தமிழக வரலாறு ஒப்பீட்டு நோக்கில் ஆய்வு செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.
பத்து காலகட்ட உருவாக்கம் என்பது இந்நூலின் அடிப்படையான நோக்குமுறையாக அமைகிறது. இதன்மூலம் புலவர்கள், தலைவர்கள் குறித்த மிக விரிவான தரவுகளைப் பெறமுடிகிறது. கால ஒழுங்கில் நிகழ்வுகளைப்புரிந்துகொள்ள இம்முறை உதவும்.
வீ. அரசு
பேராசிரியர்,முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர்,
சென்னைப் பல்கலைக்கழகம்.
பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்
- Brand: கணியன்பாலன்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹950
Tags: pazhantamil, samuthayamum, varalaarum, பழந்தமிழ்ச், சமுதாயமும், வரலாறும், கணியன்பாலன், எதிர், வெளியீடு,