எங்கள் சுற்றுலாப் பேருந்தில் ஒரு அமெரிக்கப் பெண்மணி ஓட்டுனராகவும், வழிகாட்டியாகவும் பணி புரிகிறார். வண்டி ஓட்டும்போதே நமக்கு ஒலிபெருக்கி மூலம் பல தகவல்களைச் சுவையாக விவரிக்கிறார். கெட்சிகன் கிராமம் வருடத்தில் சில மாதங்கள் பனி உறைந்து இருக்கும். எனவே அவ்வமயம் வெகு சில மக்களைத் தவிர ஏனையோர் கெட்சிகனை விட்டு வேறிடங்களுக்குச் சென்று விடுவார்கள். இந்த கிராமம் தூங்கிக் கொண்டிருக்கும். கோடைக் காலம் பிறந்தவுடன் ஐந்து மாதங்களுக்குக் கோலாகலமாக சுற்றுலாப் பிரயாணிகள் நிறைந்திருக்கும்! சுற்றுப் பக்கத்தில் எங்கு பார்த்தாலும் பனி உறைந்த சிகரங்களையும், இயற்கையின் அழகையும் பார்த்துக் கொண்டு பிரயாணம் செய்தோம். கெட்சிகனின் விசேஷங்களைப் பற்றி சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டு வந்தாள். இந்த பிராந்தியத்தில் டோடம் (totem) என்ற பெயர் கொண்ட கம்பங்கள் விசேஷமானதாகும். சுதேசி மக்கள் ஒவ்வொரு கம்பத்திலும் ஒரு சரித்திரத்தைச் சிற்பமாகச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். கரடி, கழுகு முதலான சிற்பங்களையும், வீரர்கள், மங்கையர் போன்ற சிற்பங்களையும் செதுக்கி யுள்ளனர். ஐரோப்பியர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கு குடியேறிய பிறகு இக் கம்பங்களைச் செதுக்கியதாக வழிகாட்டி விவரித்தாள்
பயணம் இரண்டாம் பாகம் கண்ணியம் - Payanam 2 Part
- Brand: கோ. வேள்நம்பி
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹300
Tags: payanam, 2, part, பயணம், இரண்டாம், பாகம், கண்ணியம், , -, Payanam, 2, Part, கோ. வேள்நம்பி, சீதை, பதிப்பகம்