• பால் அரசியல்
தம் குழந்தைகளுக்கு உண்மையாகவே தாய்ப்பால் கொடுக்க நினைத்தாலும், தமக்குப் பால் சுரப்பதில்லை என்று பல தாய்மார்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் அது உண்மை நிலை அல்ல. எந்தவொரு தாய்க்கும் அவருடைய குழந்தைக்குத் தேவையான அளவுக்குப் பால் சுரக்கும் என்பதுதான் இயற்கை. ஆனால் ஒரு தாயை அப்படி நினைக்க வைத்ததன் பின்னே மறைந்திருக்கும் அரசியலை அத்தாயே அறிய மாட்டார். அதுமட்டுமன்றி தாய்ப்பால் சுரப்பதை உண்மையிலேயே குறைக்கச் செய்வதன் பின்னணியில் பெரும் மருத்துவ அரசியல் மறைந்து இருக்கிறது.             தாய்ப்பால் கொடுக்கும் வழக்கத்தை ஒழித்துவிட்டுப் பால்மாவு வணிகத்தை நிலைநிறுத்தியவுடன் மாட்டுப் பாலுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் தொழில்முறை பால் பண்ணைகள் பெருகின.. விளைவாக உபரி பால் உற்பத்தியும் அதிகரித்தது. இந்த உபரி பால் உற்பத்தி பாலாடைக்கட்டி, பனிக்கூழ் (அய்ஸ்கிரீம்), சாக்லேட் என்ற பிற பொருட்களின் உருவாக்கத்துக்கும் உதவின. இப்பேரளவிலான உற்பத்தியால் பால் என்பது இன்று ஓர் இயற்கைப் பொருளாக இல்லை. அது தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட செயற்கைப் பொருளைப் போல மாற்றப்பட்டுவிட்டது. இப்பாலைத்தான் குழந்தைகள் தொடங்கிப் பெரியவர் வரை பயன்படுத்துகிறோம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பால் அரசியல்

  • ₹70


Tags: paal, arasiyal, பால், அரசியல், நக்கீரன், எதிர், வெளியீடு,