சுந்தர ராமசாமி தன்னைப் பாதித்த, செயலுக்கு ஊக்கமளித்த, சிந்தனைக்கு உரமூட்டிய படைப்புகளையும் ஆளுமைகளையும் முன்னோடிகளையும் குறித்து எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒரு கலைஞனின் சமரசமற்ற நோக்கிலேயே தான் பெற்ற அனுபவத்தையும் அறிவையும் கண்டடைந்த முடிவுகளையும் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். அனுபவசாரத்திலிருந்து உயிர்கொண்ட கருத்துகள், உண்மையின் சார்பில் நிற்கும் முனைப்பு, கலையில் தார்மீக மதிப்பீட்டை வலியுறுத்தும் பிடிவாதம், படைப்பின் பெருவெளிச்சத்தின் முன் அடையும் குதூகலம், மானுடக் கரிசனையின்பால் நெகிழ்வு இவை அவரது கலைநோக்கின் அடிப்படைகள். மிகைவியப்போ, பொருந்தா உதாசீனமோ தென்படமுடியாத அந்த கலை நோக்கில் பார்க்கப்படும் ஆளுமைகளும் படைப்புகளும் மேலும் பெருமை பெறுகின்றன. நோக்குபவரும் பெருமதிப்பைப் பெறுகிறார். -சுகுமாரன்
Oru Kalai Nokku (Aalumaikal Thozhamaikal)
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹300
Tags: Oru Kalai Nokku (Aalumaikal Thozhamaikal), 300, காலச்சுவடு, பதிப்பகம்,