கதையின் நாயகர் ‘குறியியல்’ துறைப் பேராசிரியர் ராபர்ட் லாங்டன் ஆவார். இவரின் முன்னாள் மாணவரான எட்மண்ட் கிர்ஷ் தன் 40 வயதிலேயே ஸ்டீவ் ஜாப்ஸ் போல சாதனைகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரராக ஆகிவிட்டவர்.
எட்மண்ட் கிர்ஷ், உலகத்தையே புரட்டிப்போடவிருக்கும், குறிப்பாக சமயங்களின் இடத்தைத் தகர்க்கும் தனது அறிவியல் கண்டுபிடிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடும் நிகழ்ச்சி தொடங்கும் முன் படுகொலை செய்யப்படுகிறார். தன் முன்னாள் மாணவரின் கண்டுபிடிப்பை எப்படியாவது உலகத்தின் முன் வெளிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ராபர்ட் லாங்டன், ஸ்பெயினின் வருங்காலப் பட்டத்து ராணியான ஆம்ரா பீடலின் உதவியுடனும், வின்ஸ்டன் என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடனும் ஸ்பெயினின் புகழ்பெற்ற கட்டிடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார். எட்மண்டின் பல்ஊடக விளக்கக் கோப்பை திறக்கும் 47 எழுத்துக் கடவுச்சொல்லை (அது ஒரு கவிதை வரி) கண்டுபிடிப்பதற்கான தேடல் வேட்டையில் ஈடுபடுகிறார். இதற்கிடையில், சில கொலைகள் நிகழ்கின்றன. கொலைகளுக்குக் காரணம் யார் என்று இறுதியில் தெரியவரும்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின்மீது வாசகர்களுக்கு பெரும் அச்சம் தோன்றுகிறது.
Tags: origin, ஆரிஜின், டான் பிரௌன், இரா. செந்தில், எதிர், வெளியீடு,