• என்.எஸ்.கே
நகைச்சுவை மட்டுமே என்.எஸ்.கேவின் அடையாளம் அல்ல, அதையும் தாண்டிய ஆளுமை அவருடையது. பரிவும் பகுத்தறிவும் அவருடைய இரண்டு கண்கள். ஆம், ஏழைகள், பசித்தவர்கள் என்றால் என்.எஸ்.கேவின் உள்ளம் சட்டென்று இரங்கிவிடும். கையில் இருப்பதை எல்லாம் கொடுத்துவிடக் கூடியவர். அள்ளிக்கொடுக்கும் விஷயத்தில் எம்.ஜி.ஆருக்கே வழிகாட்டியவர் என்.எஸ்.கே. வயிற்றுக்கு மட்டுமல்ல, சிந்தனைக்கும் விருந்து படைத்தவர். பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பட்டிதொட்டி எங்கும் பரப்பும் பிரசார வாகனமாக தமிழகம் முழுக்கத் தடம் பதித்தவர் என்.எஸ்.கே. நாடக வாழ்க்கை தொடங்கி திரை வாழ்க்கை, அரசியல் செயல்பாடு, பகுத்தறிவுப் பிரசாரம் என என்.எஸ்.கே வாழ்ந்த அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்தையும் நேர்த்தியாகப் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர் முத்துராமன். என்.எஸ்.கே சந்தித்த மாபெரும் சோதனையான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பற்றி விரிவாகவும் தெளிவாகவும் பேசும் இந்தப் புத்தகம், அவர் நடத்திய சட்டப்போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் தகுந்த ஆதாரங்களுடன் பதிவுசெய்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

என்.எஸ்.கே

  • ₹177


Tags: nsk, என்.எஸ்.கே, முத்துராமன், வானவில், புத்தகாலயம்