இந்த வருடத்தின் துவக்கத்தில் வந்திருக்க வேண்டிய புத்தகமிது. ஜனவரி மாத விடுமுறைக்குத் திருவண்ணாமலை வந்த முதல் நாளில் ஷைலஜாக்கா என்னிடம் கேட்ட சினிமாப் புத்தகம் ஒரு வழியாய் வருடக் கடைசியில் சாத்தியமாகி இருக்கிறது. ஆரம்பத்தில் என் வலைப்பக்கத்தில் எழுதப்பட்ட சினிமாக் கட்டுரைகளைத் தொகுத்து விடும் எண்ணமிருந்தது. அதைச் செயல்படுத்தும் நோக்கில் என் கட்டுரைகளை மீண்டும் வாசித்துப் பார்த்தேன். அவை மிகப்பெரும் அவநம்பிக்கையைத் தந்தன. என் வலைப்பக்கக் கட்டுரைகள் புத்தக வடிவில் வர எவ்வித முகாந்திரமுமில்லாத உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தன. ஆகவே அந்த எண்ணத்தைக் கைவிட்டு புதிதாய் எழுதிக் கொள்ளலாம் என்கிற முடிவிற்கு வந்தேன். ஷைலஜாக்காவிடம் பதினைந்தே நாளில் புத்தம் புதிதாய் ஒரு சினிமாப் புத்தகம் எழுதித் தருவதாகசொன்னேன். ஆனால் நான் நினைத்தது போல் இந்தப் புத்தகம் பதினைந்தே நாளில் எழுதிவிடும் அளவிற்கு எளிமையானதாய் இருக்கவில்லை அல்லது எனக்குப் பறினைந்தே நாளில் ஒரு சினிமாப் புத்தகம் எழுதும் அளவிற்கு எழுத்து இன்னமும் கைகூடி வரவில்லை. உலக அறிமுகப்படுத்தியதோடு மட்டும் நிற்காமல் இன்றளவும் என் சினிமா அறிவின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டிருக்கும் என் மூத்த சகோதரன் ரமேஷிற்கும், இணையப் பக்கங்களில் ஏழு வருடங்களாக என்னோடு சினிமா பற்றி உரையாடிக் கொண்டும் புதுப்புது படங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுமிருக்கும் நண்பர்களுக்கும் எல்லாவற்றிற்கும் மேலாய் சினிமாவை உன்னதமான கலை வடிவம் என நம்பும் அத்தனை உள்ளங்களுக்கும் இப்புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன்.
நிகழ் திரை (உலகத் திரை பிம்பங்களின் பரவச நடனம்)-Nigal Thirai Ulaga Thirai Bimbangalin Paravasa Nadanam