எங்கெங்கு நோக்கினும் அங்கங்கே நேர்மை நெளிந்து கிடக்கிறது; நாணயம் நலிந்து கிடக்கிறது; ஒழுங்கு மழுங்கிக் கிடக்கிறது; தூய்மை துவண்டு கிடக்கிறது. சுருங்கக் கூறின் மனச்சான்றே மறைந்து கிடக்கிறது. புண்ணிய பூமி’ என்று இந்த நாட்டுக்குப் பெயர்! ஒரோ வழி நன்மாந் தரைக் காணல் கூடும். எனினும் யாது பயன்? கடலிற் கரைத்த பெருங்காயந் தானே? இவ்வாறு நேர்மை முதலியன குறைந்து, பண்பாடுகள் மறைந்து மக்கள் மாறிவரும் நிலைமையைக் காணும் பொழு தெல்லாம் நினைந்து நினைந்து உருகி உருகி, நெஞ்சம் குமுறுவதுண்டு. அக் குமுறலின் வெளிப்பாடே இத்தொகுப்பிற் காண ப்பெறும் கவிதைகள். நடுவுநிலைமையில் நின்று நாட்டைப் பார்க்கிறேன் நாட்டைச் சுற்றிக் குற்றக் களும் குறைபாடுகளும் முற்றுகையிட்டுக் கிடப்பதைக் காணுகிறேன். அவை கடியப் பட வேண்டுமென்பதற்காகக் கண்டிக்கி றேள். அக் கண்டனத்தில் என் நண்பர் களும் சிக்கலாம்; அதற்கென் செய்வது? கண்டனத்துக்குள்ளானோர் வருந்துவர் என்பதையும் அறிவேன். மாணவன் வருந் துவானே என்பதற்காக ஆசானும், மகன் வருந்துவானே என்பதற்காக அன்னையும் கண்டிக்காமல் இருந்துவிடின் நிலைமை என் னாவது?
நெஞ்சு பொறுக்கவில்லையே - Nenju Porukavillaye
- Brand: கவியரசர் முடியரசன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹30
Tags: nenju, porukavillaye, நெஞ்சு, பொறுக்கவில்லையே, , -, Nenju, Porukavillaye, கவியரசர் முடியரசன், சீதை, பதிப்பகம்