நவீன கவிதைகள் என்பவை மரபின் தன்மையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மக்களின் வழக்கு சொற்களுக்குள் எளிய உரையாய் தன்னை பரிணமித்துக் காட்டுபவை. அனுபவங்களை சிறு வரி வடிவங்களில் படிமங்களாக மாற்றும் வல்லமை நவீன கவிதைகளுக்கு உண்டு. வாசிப்பவனுக்கு உடனடி உரையை தருதலும் அதை கொண்டு அவனாலும் அதன் தொடர்ச்சியாய் கவிதை நெய்யும் ஆற்றலை பெற்றுவிட முடியும் என்னும் நம்பிக்கையைக் கொடுப்பதும் புதுக்கவிதைகள்தான்.
அக்காலகட்டத்தில் கட்டற்ற வரிகளுடன் ப்ரி வெர்ஸ் (Free verse) என்று வால்ட் விட்மனில் தொடங்கிய நவீனத்துவம், பிரெஞ்சு நாட்டின் சர்ரியலிசம், இத்தாலியின் ப்யுச்சரிசம், ஜெர்மனியின் எஸ்ப்பிரஷனிசம் போன்றவை வசன கவிதைகளாய் மரபிலிருந்து விடுபட்ட மகிழ்வைத் தெரிவித்துக்கொண்டன. தமிழில் பாரதியார், அதன்பின் ந பிச்சமூர்த்தி, கு ப ராஜகோபாலன் ஆகியோர் கவிதைகளில் நவீனத்துவம் படைக்கத் தொடங்கினர்.
நவீன கவிதைகளில் பெண்ணியமும் தலித்தியமும் - Naveena Kavithaigalil Penniyamum Thalithiyamum
- Brand: மா. கார்த்திகேயன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹40
Tags: naveena, kavithaigalil, penniyamum, thalithiyamum, நவீன, கவிதைகளில், பெண்ணியமும், தலித்தியமும், , -, Naveena, Kavithaigalil, Penniyamum, Thalithiyamum, மா. கார்த்திகேயன், சீதை, பதிப்பகம்