• நான் பூலான் தேவி
இன்றைய அரசியல் நிலையை பார்க்கும்போது பூலான் தேவி அரசியலில் கலந்து கொண்டது தப்பே இல்லை என்று தெரிகிறது.அவர் தான் கொள்ளைக்காரி என்று உலகம் முழுக்க அறிவித்து கொள்ளையடித்து அதற்கு தண்டனையும் பெற்றே திருந்தி அல்லது திருந்தினாரா என்று தெரியாமலேயே இந்திய அரசியல் களத்தில் குதித்து மக்களவை உறுப்பினராக மக்களால் தேர்ந்தும் எடுக்கப்பட்டார். பூலான் தேவி ஆனால் இன்று சேவை செய்ய வாக்குகளை மக்களிடம் வாங்கிக்கொண்டு பதவி வந்ததும் மக்கள்  பணத்தை கொள்ளையடிக்கின்றனர் .அதில் மாட்டிக்கொண்ட பின்னரும் நாற்காலியை விட்டு இறங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் அசிங்க அரசியல் நிறைவே றிக்கொண்டிருக்கிறது. அதில் காங்கிரசுதான் முதலிடம் வகிக்கிறது. முறைகேடுகள்-ஊழல்கள் செய்யாமலேயே தங்கள் மீது சந்தேகம் வந்து விட்ட காரணத்தினால் பதவி விலகியவர்கள்,ரெயில் விபத்து,குண்டு வெடிப்பு போன்ற தனக்கு சம்பந்தமே இல்லாவிட்டாலும் தனது துறை சார்ந்தது என்று பதவி விலகிய லால் பகதூர் சாஸ்திரி போன்றோர் இருந்த காங்கிரசின் இன்றைய நிலைபாடு மிக கேவலமான தரத்தை அக்கட்சி எட்டியுள்ளது என்பதைத்தான் தெரிவிக்கிறது. சரி. இதோ கொள்ளைக் காரியாக இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பூலான் தேவி  பற்றி  கொஞ்சம்: "நான் பூலான்தேவி" என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாறு பற்றிய சுய சரிதையை பூலான்தேவி எழுதினார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நான் பூலான் தேவி

  • ₹400


Tags: naan, poolan, devi, நான், பூலான், தேவி, மு.ந. புகழேந்தி, எதிர், வெளியீடு,