இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளில் ஒவ்வொன்றிலும் நான் தனிப்பட்ட பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கின்றேன். எம்மவரிடையே காலங்காலமாகப் பேணப்பட்டுவரும் புனிதப்படுத்தல்களை கேள்விக்குட்படுத்தி உடைத்தெறிந்திருக்கின்றேன். பேசாப் பொருட்களை பேசியிருக்கின்றேன். அவைகளில் நான் வெற்றி பெற்றிருக்கின்றேனா என்பதெல்லாம் எனக்குத்தெரியாது. பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கின்றேன் என்பதை உறுதிப்படச் சொல்ல முடியும். - கோமகன்