• மொஸாட்-Mossad
வீடு மட்டுமல்ல நாடு புகுந்தும் ஆள்களைக் கடத்தியிருக்கிறார்கள். பின்தொடர்ந்து சென்று ரகசியமாகக் கண்காணித்திருக்கிறார்கள். தனிப்பட்ட உரையாடல்களை ஒட்டுக்கேட்டிருக்கிறார்கள். லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள். திருடியிருக்கிறார்கள். கணக்கற்றமுறை பொய் சொல்லியிருக்கிறார்கள். பெண்களைத் தூண்டிலாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏமாற்றியிருக்கிறார்கள். மோசடிகள் செய்திருக்கிறாõர்கள். கொன்றிருக்கிறார்கள்.இவை அனைத்தையும் அரசாங்கத்தின் பரிபூரண ஆசிர்வாதத்துடன் செய்திருக்கிறார்கள், இன்னமும் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். இஸ்ரேலின் உளவுத் துறையான மொஸாட்டுக்கு நம் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு வானளாவிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எதுவும் தவறில்லை. எதற்கும் விசாரணையில்லை, தண்டனையில்லை.எதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது? அதன் நோக்கம் என்ன? அவர்கள் இதுவரை என்னென்ன செய்திருக்கிறார்கள்? எளிய பின்னணியில் இருந்து உலகமே வியக்கும் மாபெரும் உளவு நிறுவனமாக அவர்கள் வளர்ந்தது எப்படி? ஒரு துப்பறியும் நாவலைக் காட்டிலும் பல மடங்கு விறுவிறுப்புடன் மொஸாட்டின் தோற்றம், வளர்ச்சி, செயல்பாடுகள் மூன்றையும் இந்நூலில் விவரிக்கிறார் என். சொக்கன்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மொஸாட்-Mossad

  • ₹175


Tags: , என். சொக்கன், மொஸாட்-Mossad