• மெய்நிகரி - Meinigari
2017ஆம் ஆண்டு, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘கவண்’ திரைப்படம் இந்நாவலை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் இதுவரை வாசித்துள்ள அனைத்து நாவல்களிலிருந்தும் இது முற்றிலும் வேறுபட்டது. முதல்முறையாகத் தொலைக்காட்சி ஊடகத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்தத் துடிதுடிப்பான நாவல் ஒரு தனியார் தொலைக் காட்சியில் ரியாலிட்டி ஷோ உருவாகும் பின்னணியை சுவாரஸ்யமாகக் கண்முன் கொண்டுவருகிறது. முதல் பக்கத்தில் தொடங்கும் உற்சாகம், விறுவிறுப்பு, நகைச்சுவை அனைத்தும் இறுதிப் பக்கம் வரை நீடிக்கிறது. விவரிக்கமுடியாத ஒரு புது அனுபவத்தை அளிக்கும் இந்நாவல் உங்கள் இதயத்தைக் கொள்ளைக் கொள்ளப்போவது உறுதி. இது கபிலன்வைரமுத்து எழுதி பதிப்பிக்கப்படும் பத்தாவது புத்தகம். மூன்றாவது நாவல். பதினெட்டு வயதில் இவருடைய முதல் கவிதைத் தொகுதி வெளிவந்தது. ஆஸ்திரேலியாவில் இதழியல் முதுகலை பயின்றபோது பூமரேங் பூமி என்ற தன் முதல் நாவலை எழுதினார். அதைத்தொடர்ந்து உயிர்ச்சொல் என்ற இரண்டாவது நாவல் வெளிவந்தது. கனவு காண்பது இவர் கவிதைகளின் விருப்பம். மனத்தின் நுட்பமான உணர்வுகளை எளிமையாகப் பதிவு செய்வது இவர் திரைப்படப் பாடல்களின் முயற்சி. வாழப்படுவது எழுதப்படவேண்டும் என்பது இவர் நாவல்களின் நோக்கம். தமிழ் இலக்கியத்துக்குப் புதிய களங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது கபிலன்வைரமுத்துவின் வேட்கை.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மெய்நிகரி - Meinigari

  • ₹200


Tags: meinigari, மெய்நிகரி, -, Meinigari, கபிலன் வைரமுத்து, டிஸ்கவரி, புக், பேலஸ்