ஐஸ்லாந்து நாட்டின் கடலோரக் கிராமம் ஒன்றில் தற்செயலாகப் பிறக்க நேர்ந்த, தாய் தந்தையரை அறியாத அல்ஃப்க்ரைமுரின் இளமைக்கால மனப்பதிவுகளினூடாக விரிகிறது இந்த நாவல். அவன் வளரும் ப்ரெக்குகாட் இல்லம் விசித்திர மனிதர்களின் வாழ்விடம். தனது தாத்தாவாக வரித்துக்கொண்ட ப்யோர்னைப் போலவே தானும் ஒரு செம்படவனாக வேண்டும் என்று அல்ஃப்க்ரைமுர் விரும்புகிறான். ஆனால் வாழ்க்கை அவனுக்கு வேறொன்றை விதித்திருக்கிறது. புகழ்பெற்ற பாடகராக அறியப்படும் கர்தர் ஹோமின் வருகையும் அவருடனான சந்திப்பும் அவனது வாழ்க்கைத் தடத்தை மாற்றுகிறது. முற்றிலும் ஒரு புதிய அத்தியாயத்திற்காக அந்தக் கடற்கரைக் கிராமத்திடமிருந்து விடைபெற்றுச் செல்கிறான் அல்ஃப்க்ரைமுர். வெளியுலகின் சலனங்களையும் காலத்தின் நகர்வையும் பிடிவாதமாக மறுத்து, தாங்களே வகுத்துக்கொண்ட மதிப்பீடு களின் வழி எளிய தேவைகளுடன் வாழ முயலும் பாசாங்கற்ற மனிதர்கள்தான் இந் நாவலின் மையப் பாத்திரங்கள். பாடகர் கர்தர் ஹோம் இறுதி வரையிலும் அவிழ்க்கப்படாத புதிர். நவீன வாழ்வின் வெற்றுப்பகட்டு, பேராசை இவற்றின் மீதான விமர்சனம் இந்நாவலில் உள்ளீடாகத் துலங்குகிறது. அற்புதக் கதைகளின் எளிமையும் ஈர்ப்பும், நாட்டார் கதைகளின் நகைச்சுவையும் கொண்ட இந்நாவலை தமிழ் வாசகர்கள் மிக நெருக்கமானதாக உணர்வார்கள்.Translated in tamil by Akilan Ethiraj, twentieth century icelandic writer, nobel prize winner Halldor Laxness’s most beloved novel the fish can sing is a poignant coming-of-age tale marked with his peculiar blend of light irony and dark humor. The orphan Alfgrimur has spent an idyllic childhood sheltered in the simple turf cottage of a generous and eccentric elderly couple. Alfgrimur dreams only of becoming a fisherman like his adoptive grandfather, until he meets Iceland's biggest celebrity. The opera singer Gardar Holm’s international fame is a source of tremendous pride to tiny, insecure Iceland, though no one there has ever heard him sing. A mysterious man who mostly avoids his homeland and repeatedly fails to perform for his adoring countrymen, Gardar takes a particular interest in Alfgrimur’s budding musical talent and urges him to seek out the world beyond the one he knows and loves. But as Alfgrimur discovers that Gardar is not what he seems, he begins to confront the challenge of finding his own path without turning his back on where he came from.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Meenum Pan Paadum

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹390


Tags: Meenum Pan Paadum, 390, காலச்சுவடு, பதிப்பகம்,