• மேய்ப்பர்கள்-Meaypparkal
இக்கட்டுரைகளை நான் எழுத நேர்ந்த காலங்கள் மிகவும் அருமையானவை. தொடர் பயணங்களும், வாசிப்புகளும்,கதை சொல்லலுக்கான தயாரிப்புகளுமாய் போயிருந்த என் நாட்களை என் மீது அக்கறையுள்ள ராஜகோபால் மாதிரியான நண்பர்கள் சுட்டிக் காட்டினார்கள். நான் அடிப்படையில் எழுதுபவன்தான். என் நிலப்பரப்பை எப்படியாவது எழுத்தாக்கி விட வேண்டும் என்ற பெருங்கனவு ஒன்று எதனாலேயோ இன்றுவரை கலைந்து, கலைந்து போய்விடுகிறது. எழுத்து ஒரு பயிற்சியாக என்னுள் தங்கிவிட வேண்டும் என்ற என் முனைப்புக்களும் இதுவரை கைக்கூடவில்லை. எல்லாவற்றையும் மீறி இக்கட்டுரைகளை எழுத நேர்ந்த நாட்கள் எனக்கு வாய்த்த பாக்கியமான நாட்களாகவே கருதுகிறேன். இடது சாரி இயக்கங்களோடுதான் என் நாற்பது வருடங்களைக் கரைத்திருக்கிறேன். பல உன்னதமான கலைஞர்களை, பெரும் ஆளுமைகளை, அவர்களின் எளிமையை அங்கேதான் தரிசித்திருக்கிறேன்.பல கசப்புகளை அங்கேதான் கண்களை மூடிக் குடித்திருக்கிறேன்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மேய்ப்பர்கள்-Meaypparkal

  • ₹350


Tags: meaypparkal, மேய்ப்பர்கள்-Meaypparkal, பவா செல்லதுரை, வம்சி, பதிப்பகம்