இலக்கியம் கலை எல்லாம் ஜோவின் கணவரைப் போன்ற மனிதர் களைத்தான் தேடித் தேடிப் படைத்துக்கொண்டிருக்கின்றன. (இந்தப் பட்டியலில் மதத்தைச் சேர்க்க நான் விரும்பவில்லை) இப்படியான உத்தமர்களால்தான் உலகம் நிரம்ப வேண்டும் என்று ஞானிகள் விரும்பினார்கள். ஆனால் அது அவ்வாறு நேரவில்லை. நம் தலைமுறையில் பாவத்தின் கனியைத் தின்பவர்கள் ஆண்களாக இருக்கிறார்கள். நேசத்தைப் புரிந்துகொள்ளவும் அதை கௌரவிக்கவும் அதை மகிமைப்படுத்தவும் மேன்மை கொண்ட மனிதர்களாலேயே முடியும். பெண்கள் எப்போதும் மேன்மையாளராகவே இருக்கிறார்கள். கட்டுரை இலக்கியம் தமிழில் இன்னும் சவலக் குழந்தைதான். அந்த வகை இலக்கியத்துக்கு மாரி செல்வராஜ் செழுமை சேர்த்திருக்கிறார். மிகவும் கலைப்பூர்வமான எழுத்து அவருக்கு கைவந்திருக்கிறது. இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் இருட்டு நாட்டு பெருமான் திருநெல்வெலி சொட்டு அக்கா முதலான பலஅற்புதமான எழுத்தாக்கங்கள் தமிழில் நீண்ட நாட்கள் நினைவில் வைக்கப்பட்டிருக்கும். வாழ்க்கை இலக்கியம் ஆகாது. வாழ்க்கையிலிருந்து பெறப்படுவதுதான் இலக்கியம். எழுதும் கலைஞர்கள் வாழ்க்கையிலிருந்து சில தரிசனங்களை பெறுகிறார்கள். சில அனுபவங்களை பெற்றுக்கொள்கிறார்கள் கலைஞர்கள்(சினிமா, எழுத்து சார்ந்த எந்த துறையானாலும்) தங்கள் அனுபவங்கள் உலகுக்கு உதவும் என்று கருதுகிறார்கள். ஆகவே படைக்கிறார்கள் வாழ்க்கையின் ஊடாக மனிதர்களின் செயல்பாடுகளின் ஊடாக கலைஞர்களின் பார்வை உள் செலுத்தப்படுகிறது. கலைஞர்கள் தாங்கள் பெற்ற கலைத் திறமையின் பயனாக இந்தப் பணியைச் செய்கிறார்கள் அந்தப் படைப்புகள் நிலைபேறடைகின்றன. மனித சமுதாயம் அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறது. கலை இலக்கியங்கள் மட்டுமே மனிதர்களை மனிதர்களாக்குகின்றன என்று நான் நிச்சயம் உணர்கிறேன்.
மறக்கவே நினைக்கிறேன்-Marakkavea Ninaikkirean
- Brand: மாரி செல்வராஜ்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹350
Tags: marakkavea, ninaikkirean, மறக்கவே, நினைக்கிறேன்-Marakkavea, Ninaikkirean, மாரி செல்வராஜ், வம்சி, பதிப்பகம்