மாவீரன் அலெக்சாண்டரின் வீரத்தைப் பற்றிப் பேசும்போது, அலெக்சாண்டரே புகழ்ந்த பாரதத்தின் பராக்கிரமசாலி புருஷோத்தமனின் வீரமும் சேர்ந்தே பேசப்படும். அதுபோல், அக்பரைப் பற்றிப் பேசும்போதெல்லாம், ராஜபுத்திரர்களில் மாவீரனாக விளங்கிய பிரதாப சிம்மனின் வீரமும் விவேகமும் சேர்ந்தே பேசப்படும். மகாராணா பிரதாப சிம்மனின் வீர வரலாறு, இந்திய நாட்டின் வரலாற்றில் அழிக்கமுடியாத ஒரு பதிவு! சுயமரியாதைக்காகவும், நாட்டுப் பற்றின் காரணமாகவும், சுதந்திரக் காற்றை மக்கள் சுவாசிக்க வேண்டும் என்பதற்காகவும் எல்லையற்ற துன்பங்களையும், துரோகங்களையும் எதிர்த்து நின்றவன் ராணா பிரதாப். அக்பரின் சூழ்ச்சிகளையும், பணபலத்தையும் படைபலத்தையும் எதிர்க்க இயலாமல், எத்தனையோ மன்னர்கள் கைகட்டி சேவகம் செய்த நேரத்தில், மாவீரனாக வெகுண்டெழுந்து சுதந்திர யுத்தம் நடத்திய பிரதாப சிம்மனின் வரலாற்றை அழகாகத் தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர் மு.ஸ்ரீனிவாசன். பிரதாப சிம்மனின் முன்னோர்கள் பற்றியும், மேவார் வம்சத்தின் பட்டப் பெயரான ராணா என்பதன் பின்னணியையும் வரலாற்றுச் சம்பவங்களோடு மேற்கோள்காட்டி விளக்கியுள்ளார். அக்பரின் பெரும்படைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ராணா பிரதாப், பீல் பழங்குடி மக்களுடன் கொண்டிருந்த சகோதரத்துவம், சமத்துவம், சமய, சமுதாய நலன் கருதி மேற்கொண்ட புரட்சிகரமான போர்முறை ஆகியவற்றை சுவாரஸ்யமாக வழங்கியுள்ளார் நூலாசிரியர். இந்தியாவின் வீரவரலாற்றை அறிய விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
மகாராணா பிரதாப சிம்மன்
- Brand: மு. ஸ்ரீனிவாசன்
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹70
-
₹60
Tags: maharaana, pratab, simman, மகாராணா, பிரதாப, சிம்மன், மு. ஸ்ரீனிவாசன், விகடன், பிரசுரம்