மகாபாரதம் பற்றிய இந்தப் புத்தகம் மிக அபூர்வமானது. மகாபாரதத்தின் கதையைச் சொல்லும்போதே, மகாபாரதம் தொடர்பாக நிலவி வரும் பல்வேறு சந்தேகங்களையும் குற்றச்சாட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவற்றுக்கும் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம். ஆதாரபூர்வமான, நுணுக்கமான, ஆழமான பதில்கள் இந்நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. இந்த ஆதாரங்களை எல்லாம் எந்த எந்தப் புத்தகங்களில் இருந்து ஹரி கிருஷ்ணன் திரட்டி இருக்கிறார் என்பதுதான் இந்தப் புத்தகத்தை முக்கியான புத்தகமாக்குகிறது. ஹரி கிருஷ்ணன் பாரதி அன்பர். தமிழ் இலக்கிய உலகில் பிரபலமானவர். மகாபாரதம், இராமாயணம், திருக்குறள் மற்றும் பாரதியின் எழுத்துகளில் ஆழங்கால் அறிவு கொண்டவர். இந்த இலக்கியங்களை நுணுக்கமாக ஆராய்பவர். அவற்றை அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துரைப்பதில் வல்லவர். மகாபாரதம் மாபெரும் உரையாடல் என்னும் இந்தப் புத்தகம் காலம் கடந்து நிற்கப் போகும் ஒரு பொக்கிஷம். எளிய வாசகர்களின் பார்வையில் மகாபாரதத்தின் சிக்கல்களை எளிமையாக ஆதாரத்தோடு விளக்கும் அரிய நூல்
மகாபாரதம் மாபெரும் உரையாடல் - Mahabharatham Maperum Uraiyadal
- Brand: ஹரி கிருஷ்ணன்
- Product Code: சுவாசம் பதிப்பகம்
- Availability: In Stock
-
₹550
Tags: mahabharatham, maperum, uraiyadal, மகாபாரதம், மாபெரும், உரையாடல், -, Mahabharatham, Maperum, Uraiyadal, ஹரி கிருஷ்ணன், சுவாசம், பதிப்பகம்