ஸெல்மாவின் முதல் புத்தகமான ‘மதகுரு’தான் அவருடைய மிகச் சிறந்த புத்தகமாகவும் கருதப்படுகிறது. இப்புத்தகத்திலுள்ள கதைகள் அவர் வாழ்ந்த வான்லேண்ட் பிராந்தியத்தில், அவர் பிறப்புக்கு அரை நூற்றாண்டுக்கு முன் நிலவிய வாழ்வு குறித்த அவருடைய பாட்டியார் கூறியவற்றிலிருந்து, கிளைத்தவையாகும். 1909-ல் இவர் நோபல் பரிசு பெற்றார். பின் ஸ்வீடிவ் அக்காடமியும் இவரை உறுப்பினராக்கிக் கவுரவித்தது. அரசியல் பற்றியோ, மதம் பற்றியோ தீவிரமான அபிப்ராயங்கள் சொல்லாமல், பெண் எழுத்தாளர்களின் பட்டுக்கொள்ளாத ஜாக்கிரதையுடன் வாழ்ந்தார். 1940-ல் காலமானர். லாகர் லெவின் மிக முக்கியமான வேறு நூல்கள் ‘போர்த்துகலியாவின் சக்ரவர்த்தி’, ‘ஜெருசலம்’ ஆகியவை. அதே போல் ‘நில்லின் அதிசய வீரக்கதைகள்’ இவர் எழுதிய மற்றொரு புகழ் பெற்ற புத்தகம். குழந்தைகளுக்காக எழுதியது. மொழிபெயர்ப்பில் பல தேசக் குழந்தைகளுக்கும் பரிச்சயப்பட்டது
நோபல் பரிசு பெற்ற நாவல் மதகுரு பாகம் 1-Madhaguru Part 1
- Brand: க.நா. சுப்ரமண்யம்
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹80
Tags: madhaguru, part, 1, நோபல், பரிசு, பெற்ற, நாவல், மதகுரு, பாகம், 1-Madhaguru, Part, 1, க.நா. சுப்ரமண்யம், கவிதா, வெளியீடு