கார்த்திக், “என்னைத்தானே தேடுறீங்க…” என்றவுடன் நித்யா தடுமாறிவிட்டாள். “இல்லையே…. ”என்றாள். “பொய் சொல்லாதீங்க. சர்ச் வாசல்ல இப்படி பொய் சொன்னா கர்த்தருக்கே அடுக்காதுங்க. சரியா 6.40க்கு ‘காணிக்கை தந்தோம் கர்த்தாவே….’ன்னு பாடுறப்ப, ஸ்கார்ஃப சரி பண்ற மாதிரி ஒரு மாதிரி “மொய்ங் மொய்ங்’ன்னு என்னைப் பாத்தீங்க. அப்புறம் சரியா 6.52க்கு ஸ்கார்ஃப் முடிச்ச அவுத்து திருப்பிக் கட்டிகிட்டே அடிக்கண்ணுல, “நான் அவ்ளோ அழகாடா?”ங்கிற மாதிரி பாத்தீங்க. அப்புறம் சரியா 6.58க்கு “ஏன்டா இப்படி என்னைக் கொல்ற?’ங்கற மாதிரி பாத்தீங்க” “ஆமாம். பாத்தேன். நீங்க திரும்பி திரும்பி பாத்தீங்க. அதனால கோபமா பாத்தேன்” “இல்ல…. கோபமா பாத்தா என்னை முறைச்சிருக்கணும். முணுமுணுன்னு திட்டியிருக்கணும்” “சரி… இப்ப முறைக்கிறேன். இப்ப திட்டுறேன்” என்ற நித்யா சில வினாடிகள் அவனை முறைத்துவிட்டு, முணுமுணுத்தவள் அடக்க முடியாமல் புன்னகைத்தாள். “நீங்க ஸ்மைல் பண்றப்ப ஒரு ஃபேமிலி பேக் ஐஸ்க்ரீம முழுசா ஒரே வாய்ல முழுங்கின மாதிரி உடம்பெல்லாம் சில்லுன்னு ஆயிடுச்சு” “இந்த மாதிரில்லாம் பேசுனா மயங்கிடுவேன்னு நினைக்காதீங்க” “வேறு எந்த மாதிரி பேசினா மயங்குவீங்க?” என்றவுடன் அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல், “ஹலோ…. உங்களுக்கு என்ன வேணும்?” என்றாள். “உங்களை இந்த மாதிரி தூரத்துல இருந்து பாக்குறது… சிரிக்கிறதெல்லாம் சரவணா ஸ்டோர் வாசல்ல நின்னுகிட்டு, ஏஸி காத்து வாங்குற மாதிரி இருக்கு. எனக்கு சரவணா ஸ்டோர்க்குள்ள வரணும்” “வா….” என்ற நித்யாவின் முகத்தில் வெட்கம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

காதல் எக்ஸ்பிரஸ்

  • ₹555


Tags: love, express, காதல், எக்ஸ்பிரஸ், ஜி.ஆர்.சுரேந்தர்நாத், வானவில், புத்தகாலயம்