• கோவணாண்டி கடிதங்கள்
நம் நாட்டில் மக்களுக்கு ஆதாரமானதாக இருக்கும் விவசாயத் துறை மட்டும் மன்னர் ஆட்சிகளுக்குப் பிறகு, ஏறெடுத்தும் பார்க்கப்படாத பரிதாப நிலையில்தான் இருக்கிறது. அதிலும், மக்களாட்சி என்ற பெயரில் அரசியல்வாதிகள் வந்து அமர்ந்த பிறகு, நவீனத்துவம் என்ற பெயரில் தொழில் துறைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்டுவிட்ட விவசாயத்துறை, கிட்டத்தட்ட சீரழிந்தே போய்விட்டது. அதன் பலனைத்தான் 'உணவுப் பொருள் பஞ்சம்' என்ற பெயரில் தற்போது உலகமே அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 'பசி, பட்டினி போன்ற கேவலமான சூழலுக்கு இந்த உலகம் தள்ளப்பட்டுவிடும் அபாயம் காத்திருக்கிறது' என்று பல மாதங்களுக்கு முன்பிருந்தே அபாய மணி அடிக்க ஆரம்பித்துவிட்டவர் கோவணாண்டி. ஜோசியமாகவோ ஹேஷ்யமாகவோ அல்ல... உலகத்தின் நாடியைப் பிடித்துப் பார்த்து அந்த ஓசையை எழுப்பினார். விவசாயம், கிராமப்புறம், சுற்றுச்சூழல் என்று பலதரப்பட்ட விஷயங்களைக் கையில் எடுத்துக்கொண்டு, ஆவேசம், கிண்டல், கேலி, அறிவுரை என்று பல ரசம் ததும்ப, அரசியல்வாதிகள் மற்றும் மக்களுக்கு 'பசுமை விகடன்' இதழ் மூலம் கோவணாண்டி முன் வைத்த முறையீடுகள்... கடிதங்கள்... சாமானியப்பட்டவையல்ல..! தனி வெடியாக வந்த அந்தக் கடிதங்கள் இப்போது சரவெடியாக உங்கள் கைகளில்... 'பசுமை விகடன்' சார்பாகத் தமிழக அளவில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் மற்றும் கூட்டங்களின் போது, 'யார் இந்தக் கோவணாண்டி?' என்றபடி அவரைத் தேடி அலைமோதும் மக்களே அதற்குச் சாட்சி! 'யார் இந்தக் கோவணாண்டி?' என்று அரசியல்வாதிகள் வட்டாரத்திலும் தேடுகிறார்கள். அதுமட்டுமா... கோவணாண்டியின் வருகைக்குப் பிறகு, பத்திரிகை, தொலைக்காட்சி என்று பல தளங்களிலும் அவரைப் போலவே ஆவேச அவதாரங்கள் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கின்றன. இதுவே, கோவணாண்டியின் ஆவேச எழுத்துக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்! இந்த நூலில் இடம் பெற்றுள்ள கோவணாண்டியின் ஒவ்வொரு கடிதத்தையும் படித்தால், அவருடைய கோபத்தில் இருக்கும் நியாயங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கோவணாண்டி கடிதங்கள்

  • ₹70
  • ₹60


Tags: kovanandi, kadithangal, கோவணாண்டி, கடிதங்கள், கோவணாண்டி, விகடன், பிரசுரம்