மீன் பழங்காலத்திலிருந்தே இயற்கை ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட ஒரு மலிவான மற்றும் எளிதில் செரிமானத்திற்கு ஏற்ற புரதம் நிறைந்த மற்றும் மனிதர்களுக்கு ஏற்ற உணவாகும். எனினும், சுற்றுப்புறச் சூழல் கேடு மற்றும் அதிக சுரண்டல் காரணமாக மீன்களின் வரத்து குறைகின்றது, மீன் உற்பத்தியை பெருக்க நிறைய வழி முறைகளை கடைபிடிக்க விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட அல்லது செயற்கை முறையில் மீன் உற்பத்தியையம் நுகர்வையும் எளிதான முறையில் பெருக்கலாம். விவசாயிகள் எளிதான முறையில் கிராமத்தில் குளம், நீர் தொட்டி அல்லது மற்ற நீர் ஆதாரங்களிலும் மீன் வளர்ப்பை மேற்கொண்டு தங்களது நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இது மேலும் மீன் வளர்ப்பில் முன் அனுபவ திறமை பெற்றிருந்தாலும், இல்லையென்றாலும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வருமானம் ஈட்டக் கூடிய தொழிலாக அமைகிறது. நம் நாட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையான மீன்களை வளர்ப்பது மீன் வளர்ப்பில் தற்போது உள்ள மேம்பட்ட தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பம் தான் கூட்டு மீன் வளர்ப்பு முறையாகும். இந்த தொழில்நுட்பம் செயற்கை உணவு கொடுப்பதன் மூலம் கூடுதலாக குளத்தில், தொட்டியில் மீன் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்பதால் பரவலாக உள்ளது. 2 மீட்டர் ஆழம் உள்ள வற்றாத நீர் குளம், தொட்டி நீரில் மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தலாம். எனினும், குறைந்தபட்சம் ஒரு மீட்டருக்கும் குறைவான தண்ணீர் உள்ள பருவகால குளங்களில் குறுகியகாலம் மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம்.
கூட்டு மீன் வளர்ப்பு - Kootu Meen Valarupu
- Brand: டாக்டர் வெ. சுந்தரராஜ்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹150
Tags: kootu, meen, valarupu, கூட்டு, மீன், வளர்ப்பு, , -, Kootu, Meen, Valarupu, டாக்டர் வெ. சுந்தரராஜ், சீதை, பதிப்பகம்