• கச்சத்தீவு
இந்திரா காந்தி- சிறிமாவோ பண்டாரநாயக ஒப்பந்தம் மூலம் முந்நூறு ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமல்ல; தமிழக மீனவர்களின் உரிமைகளும் எதிர்காலமும் சேர்த்தே பறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவு இலங்கைவசம் சென்றதை இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும் பார்க்கமுடியும். மத்திய அரசு நினைத்தால் மாநில அரசின் மீது எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதற்கான சமகால சாட்சியம் இது. அறுநூறுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் ஊனமாக்கப்பட்டுள்ளார்கள். மதிப்பிட முடியாத அளவுக்குப் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இருந்தும் பெரும் வல்லரசுக் கனவுடன் இருக்கும் இந்தியாவால் சின்னஞ்சிறு இலங்கைத் தீவை குறைந்தபட்சம் அதட்டக்கூடிய முடியவில்லை. இதை மத்திய அல்லது மாநில அரசின் இயலாமை அல்லது விருப்பமின்மை என்று மட்டுமே புரிந்துகொள்வது பிரச்னையின் ஆழ, அகலங்களைக் குறைத்து மதிப்பிடுவதாகிவிடும். மாறாக, இந்தியா மற்றும் இலங்கையின் பூகோள, அரசியல் நலன்களை விரிவாக ஆராய்ந்தால் மட்டுமே கச்சத்தீவு பிரச்னையின் முழுப் பரிமாணமும் காணக்கிடைக்கும். கச்சத்தீவு கைமாறிய வரலாறு, அதன் பின்னணியில் இருக்கும் அரசியல், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், ஈழத்தமிழர் போராட்டத்தின் தாக்கம், இருதரப்பு நியாயங்கள், மீனவர்களின் எதிர்பார்ப்புகள், கச்சத்தீவை மீட்பதில் உள்ள சட்டச் சிக்கல்கள், நிபுணர்கள் முன்வைக்கும் தீர்வுகள் என்று கச்சத்தீவு குறித்த முழுமையான அரசியல், சமூக, வரலாற்றுச் சித்திரத்தை முன்வைக்கிறது இந்தப் பதிவு. நூலாசிரியர் ஆர். முத்துக்குமார். இந்திய மற்றும் தமிழக அரசியல் குறித்து விரிவான வாசிப்பையும் ஆய்வையும் மேற்கொண்டு வருபவர். திராவிட இயக்க வரலாறு (இரண்டு பாகங்கள்), தமிழக அரசியல் வரலாறு (இரண்டு பாகங்கள்) என்ற இவருடைய இரண்டு பெருநூல்களும் பரவலான வாசிப்பையும் கவனத்தையும் பெற்றவை.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கச்சத்தீவு

  • ₹160


Tags: kachatheevu, கச்சத்தீவு, ஆர். முத்துக்குமார், Sixthsense, Publications