‘நான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவள். நான் இதுவரை போர்க்களத்தில் கால்களைப் பதித்ததில்லை. என் கரம் இதுவரை வாளைத் தீண்டியதில்லை. எளிமையான, விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவள் நான். இருந்தும் இங்கிலாந்தை முறியடித்து பிரான்ஸை விடுவிக்கும் பெரும் பணியை கடவுள் எனக்கு அளித்திருக்கிறார். என் தாய்நாட்டின் விடுதலைக்காக என் உயிரைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்.என் தலைமையை ஏற்க பிரான்ஸ் தயாராக இருக்கிறதா?’ ஒரு பதினேழு வயது சிறுமியிடம் ராணுவத்தையும் அதிகாரத்தையும் அளிக்க பிரான்ஸ் தயாராக இல்லை. போர்க்களத்தில் பெண்களுக்கு என்ன வேலை? அதுவும் ஒரு சிறுமிக்கு? கடவுள் என்னிடம் பேசினார்; படைகளுக்குத் தலைமை தாங்கச் சொன்னார் என்று சொல்லி முன்பின் அறிமுகமில்லாத, குழந்தைத்தன்மை மாறாத ஒரு பெண் திடீரென்று வந்து அறிவித்தால் எப்படி நம்புவது?இங்கிலாந்து போன்ற ஒரு பலமிக்க எதிரியைச் சமாளிக்கும் பொறுப்பை ஜோனிடம் ஒப்படைத்துவிட்டு அவர் பின்னால் அரசரும் படை வீரர்களும் கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கவேண்டுமா? இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா என்ன? இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து பிரெஞ்சு நகரங்களை ஒரே ஆண்டில் மளமளவென்று ஜோன் விடுவித்துக் காட்டியபோது கடவுளையும் ஜோனையும் அருகருகில் வைத்துப் போற்றியது பிரான்ஸ். ஒரு பெண் நம்மை எதிர்த்துப் போரிட்டுவருவதா என்னும் இங்கிலாந்தின் அலட்சியத்தைச் சுக்குநூறாக உடைத்தெறிந்தார் ஜோன். அசாத்தியமான மனிதர்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்பதை ஜோன் ஆஃப் ஆர்க் திட்டவட்டமாக நிரூபித்தபோது உலகம் அவரைக் கட்டுக்கடங்காத வியப்புடன் பார்த்தது. ஆனால் அப்போது ஜோன் உயிருடன் இல்லை.இது ஜோனின் கதை. வரலாற்றை மாற்றியமைத்த ஓர் அசைக்கமுடியாத சக்தியின் கதையும்கூட.
Joan of Arc/ஜோன் ஆஃப் ஆர்க்
- Brand: ரஞ்சனி நாராயணன்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹225