தமிழ்ச் சிறுகதை மரபில் தன்னுடைய ‘எட்டு கதைகள்’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் அதிர்வுகளோடு அடியெடுத்துவைத்த இராசேந்திர சோழன் ஒரு முக்கியமான நிகழ்வு. மார்க்ஸியமும் நவீன அழகியலும் அபூர்வமாக இணைந்த முதல் தமிழ் சாத்தியம் அவர். எட்டு கதைகளோடு வெளிவந்த இவரது இன்னொரு சிறுகதை நூலான ‘பறிமுதல்’ முற்போக்கு இலக்கிய வகைமையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்திய தொகுப்பாகும். மொழியின் செம்மையும் விமர்சன வன்மையும் கொண்ட அவருடைய படைப்புகள் மனிதர்களின் உளவியலுக்குள், குறிப்பாக ஆண் -பெண் உறவு சார்ந்த பிரமைகள், அச்சங்கள், மயக்கங்களுக்குள் பயணிப்பவை. ஒரு பெண்ணின் சுதந்திரமான பாலுறவுத் தேர்வு ஆண் மனத்தில் உருவாக்கும் அச்சங்கள், கலவரங்கள், அழுத்தங்களைப் பதிவுசெய்த குறுநாவலான ‘சிறகுகள் முளைத்து’, இப்போது படிக்கும்போதும் கனமான அனுபவத்தையே தருகிறது. அஸ்வகோஷ் என்ற புனைபெயரிலும் எழுதிய இராசேந்திர சோழன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். அறிவை ஜனநாயகப்படுத்துவதுதான் எனது லட்சியம் என்று கூறும் இராசேந்திர சோழன், ‘அணுசக்தி மர்மம்: தெரிந்ததும் தெரியாததும்’, ‘அரங்க ஆட்டம்’, ‘பின்நவீனத்துவம்: பித்தும் தெளிவும்’ போன்ற முக்கியமான அபுனைவு நூல்களை எழுதியுள்ளார்.
எட்டு கதைகள்-Ettu Kathaigal
- Brand: இராஜேந்திரசோழன்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: ettu, kathaigal, எட்டு, கதைகள்-Ettu, Kathaigal, இராஜேந்திரசோழன், வம்சி, பதிப்பகம்