ஏன் ஒரே ஒரு ஐன்ஸ்டீன், ஒரே ஒரு ஆபிரகாம் லிங்கன், ஒரே ஒரு பில் கேட்ஸ் மட்டும் இந்த உலகில் தோன்றியிருக்கிறார்கள் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? ஏன் அலெக்சாண்டரைப் போல் இன்னொரு மாவீரன் பிறக்கவில்லை? ஏன் இன்னொரு காந்தியைக் காண-முடிவதில்லை? ஏன் இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாகவேயில்லை?நம்மைப் போன்ற சாமானியர்களால் எப்படி அவர்களைப் போல் மாற-முடியும்? நோ சான்ஸ்! இப்படி நீங்களும் நம்பிக்-கொண்டிருந்தால் உங்களுக்கு இந்தப் புத்தகம் அவசியம் தேவை. சாமானியர்கள், அசாதாரணமானவர்கள் என்று இந்த உலகில் எந்தப் பிரிவினையும் இல்லை. நீங்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளையும் அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். உங்களைப் போலவே அவர்களும் தொடர்ந்து சறுக்கியிருக்கிறார்கள். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் மிக அதிகத் தோல்விகளை அவர்கள் சுவைத்திருக்-கிறார்கள். இருந்தும் அவர்கள் தங்கள் துறைகளில் வல்லவர்களாக மின்னியதற்குக் காரணம் அவர்கள் அசாதாரணமானவர்கள் அல்லர். மிக எளிமையான முறையில் அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட தடைகள் அனைத்தையும் தாண்டி வந்தார்கள்.அவர்களுக்குச் சாத்தியமானவை அனைத்தும் உங்களுக்கும் சாத்தியப்படும். அவர்களைப் போலவே நீங்களும் ஒரு வல்லவர்தான். இதை நீங்கள் உறுதியாக நம்பத் தொடங்கும்போது உங்கள் ஆளுமை பல மடங்கு பிரகாசிப்பதை நீங்களே உணரலாம். சுயமுன்னேற்றம், நிர்வாகம், மனித வள மேம்பாடு ஆகிய துறைகளில் தனியிடம் பிடித்த சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் உங்களுக்கு ஒரு மந்திரச் சாவி.
எல்லோரும் வல்லவரே-Ellorum Vallavare
- Brand: சோம. வள்ளியப்பன்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: , சோம. வள்ளியப்பன், எல்லோரும், வல்லவரே-Ellorum, Vallavare