• தாவூத் இப்ராஹிம்
மும்பை மாஃபியாவைப் பற்றிய வரலாற்று ரீதியான ஒரு முக்கியமான முதல் தொகுப்பு டோங்கிரிலிருந்து துபாய்க்கு புத்தகம். ஹாஜி மஸ்தான், கரீம் லாலா, வரதராஜ முதலியார், அபு சலீம் போன்ற முக்கிய குற்றவாளிகளின் கதை இது. அதை விட முக்கியமாக காவல்துறையில் பணியாற்றிய ஒருவருடைய மகன் குற்றவாளியான கதை இது. ஆரம்பத்தில் மும்பை காவல்துறையின் பகடைக்காயாக இருந்த தாவூத் இப்ராகிம் அவர்களுக்காக எதிரிகளை ஒழிக்கத் தொடங்கி ஒருகட்டத்தில் மும்பை காவல்துறைக்கே எதிரியாக மாறினான். இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் பல குற்றங்கள் பற்றியும் தகவல்கள் இருக்கின்றன. பதான்களின் வளர்ச்சி, தாவூத் குழு உருவானது, முதல் சுபாரி, பாலிவுட்டில் மாஃபியாவின் தலையீடு, கராச்சியில் தாவூத் குடியேறியது, உலகின் முக்கிய குற்றவாளி ஒருவனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுவது என பல விஷயங்களைப் பற்றிச் சொல்கிறது. இந்தக் கதை முக்கியமாக டோங்கிரியில் இருந்து துபாய்க்குச் சென்று டானாக மாறிய ஒரு சிறுவனைப் பற்றியது. அவனது தைரியம், நோக்கம், குள்ளநரித்தந்திரம், லட்சியம், அதிகார வெறி போன்ற பல விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாகப் பேசுகிறது. மிக ஆழமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட இந்த புத்தகம் மாஃபியாவின் அதிகார விளையாட்டுகள் பற்றியும், பயங்கரமான போர்முறைகள் பற்றியும் சொல்கிறது. எஸ்.ஹுஸைன் ஸைதி, மும்பை மீடியாவில் எழுதி வரும் மும்பையைச் சேர்ந்த ஒரு முக்கியமான க்ரைம் ரிப்போர்ட்டர். இவர் ஆஸியன் ஏஜ், மும்பை மிரர், மிட் டே, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பல பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கிறார். 26/11 மும்பை தாக்குதல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட HBOவின் ஆவணப்படமான terror in mumbaiயில் துணைத் தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார் ஸைதி. இவர் மும்பையில் தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தாவூத் இப்ராஹிம்

  • ₹433
  • ₹368


Tags: dongri, to, dubai, daaavoodh, ibrahim, தாவூத், இப்ராஹிம், ஹுசைன் சைதி தமிழில் : கார்த்திகா குமாரி, Sixthsense, Publications