• தர்ம சாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை
மக்களுக்காகவே, தடுமாற்றத்தால் தத்தளிப்பவர்களை நல் வழிப்படுத்துவதற்காகவே நம் முன்னோர்களால் தர்ம சாஸ்திரங்கள் அருளப்பட்டுள்ளன. ராகு காலத்தில் பயணம் செய்வது போன்ற சிறு பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்வது முதற்கொண்டு மிகப் பெரிய பிரச்சனைகளிலிருந்து விடுபடுவது வரைக்குமான அனைத்திற்கும் அவற்றில் துல்லியமான விளக்கங்கள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் பற்றி இந்த நூலில் நாம் விரிவாகக் காணலாம்.முக்கால்வாசி மக்கள் முழுக் கெட்டவர்களும் இல்லை. முழு நல்லவர்களும் இல்லை. ஒருபுறம் தர்மம் அவர்கள் மனதை ஈர்க்கும். மறுபுறம் ஆசாபாசங்கள் அவர்களை இழுக்கும்.அயோக்கியர்களுக்கு இந்தக் கவலையே இல்லை. ஏனெனில் அவர்களது ஆசைகளே அவர்களை வழிநடத்திச் செல்கின்றன.“தர்மசங்கடம் என்பது முற்றிலும் முரண்பாடான இரு நிலைகளுள் எதனை ஏற்பது என்று தவிக்கும் நிலை. இது யோக்கியர்களுக்கு மட்டுமே அடிக்கடி ஏற்படும்.”எது அறம்? எது சரியான பாதை என்று கண்டறிவதில் மகான்களும் பல நேரங்களில் தடுமாறி உள்ளனர். இதனையும் விதுர நீதி அழகாக விளக்குகிறது.வியாசர் இதனை மிக அழகாக இப்படி விவரிக்கிறார்: “கோடை காலத்தில் மலையில் உள்ள சுனைநீர் மேலே வெதுவெதுப்பாகவும், ஆழத்தில் குளிர்ச்சியுடனும் இருப்பதுபோல், திருதராஷ்டிரனின் மனத்துள் மேலே துக்கமும், ஆழத்தில் மகிழ்ச்சியும் இருந்தன” என்று.வாரணாவதத்தில் அரக்கு மாளிகை தீப்பிடித்துப் பாண்டவர்கள் எரிந்து சாம்பலாகிவிட்டனர் என்ற சேதி வந்தபோது திருதராஷ்டிரன் மனம் தம்பியின் பிள்ளைகள் மாண்டுவிட்டனரே என வருந்திய அதே நேரத்தில் அதன் அடி ஆழத்தில் துரியோதனன் பட்டம் சூடுவதற்கு இருந்த தடை விலகியது என்று ஒரு மெல்லிய சந்தோஷமும் ஏற்பட்டது.மனித மனம் சலனங்கள் உடையது. ஆசாபாசங்கள் நிரம்பியது. ஒருவரைப் பாதித்த கெட்ட சம்பவம் பற்றிக்கேட்டதும் பதைபதைக்கும். அதே நேரத்தில் அதனால் ஏற்படக் கூடிய லாபத்தைப் பற்றியும் அடிமனத்தில் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தர்ம சாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை

  • ₹244


Tags: dharma, sastiram, kaattum, vaazhkkai, paadhai, தர்ம, சாஸ்திரம், காட்டும், வாழ்க்கைப், பாதை, , அரவிந்தன், வானவில், புத்தகாலயம்