சினிமா நம் ரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்று. ஆனாலும் சினிமா வியாபாரம் பற்றி இங்கு யாருக்கும் எதுவும் தெரியாது. சினிமா என்பது தியேட்டரில் படம் பார்ப்பதில் தொடங்கி தியேட்டரோடு முடிந்துவிடுவதல்ல. அதையும் மீறிப் பயணிப்பது. வேகமாக மாறி வரும் உலகில் சினிமா வியாபாரமும் வெகுவாக மாறிவிட்டது. சினிமா மட்டுமல்ல, சினிமாவுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றுமே இன்று வியாபாரம்தான். சினிமா வியாபாரத்தின் எல்லைகள் விரிவடைந்துவிட்டன. இதனால்தான் இன்றைய சாமானியனால் எந்தப் படம் லாபம் எந்தப் படம் நஷ்டம் என்று கணிக்கமுடிவதில்லை. சினிமா வியாபாரம் பற்றி முழுமையாக அறிந்துகொண்டால்தான், சினிமாவின் அனைத்துச் சாத்தியங்களையும் பற்றி நம்மால் புரிந்துகொள்ள முடியும். * சினிமாவின் வெற்றி தோல்வி என்பது என்ன? * சினிமாவின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பவர்கள் யார்? * விநியோகிஸ்தர்கள் யார்? * சினிமா வியாபாரம் என்பது தியேட்டர் வசூல் மட்டும்தானா? இப்படி சினிமா வியாபாரத்தின் அனைத்துச் சாத்தியங்களையும் இந்த நூலில் அலசி இருக்கிறார் கேபிள் சங்கர். தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமின்றி, கோலிவுட், ஹாலிவுட் வரைக்குமான சினிமா வியாபாரத்தின் நுணுக்கமான பக்கங்களை இந்த நூல் அறிமுக செய்கிறது
சினிமா வியாபாரம் 3.0 - Cinema Viyabaram 30
- Brand: கேபிள் சங்கர்
- Product Code: சுவாசம் பதிப்பகம்
- Availability: In Stock
-
₹220
Tags: cinema, viyabaram, 30, சினிமா, வியாபாரம், 3.0, -, Cinema, Viyabaram, 30, கேபிள் சங்கர், சுவாசம், பதிப்பகம்