ஒரு பக்கம் போர். தேசங்களுக்கு இடையிலும் மக்களுக்கு இடையிலும். மனிதத்தையும் அமைதியையும் வளர்க்கவேண்டிய கிறிஸ்தவ பாதிரிகள் பிளவுகளை மட்டுமே ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். மக்கள் எதைச் சிந்திக்க வேண்டும், எதைச் சிந்திக்கக்கூடாது என்பதை அன்றைய தேவாலயங்கள் தீர்மானித்தன. இந்த சீரழிந்த 18-ம் நூற்றாண்டு சமூகத்துக்கு உயிர் கொடுக்க தத்துவஞானிகளும் கலைஞர்களும் ஓவியர்களும் கலா ரசிகர்களும் விஞ்ஞானிகளும் ஓர் அலையாகக் கிளம்பி வந்தனர்.இந்தப் பின்னணியில், வோல்ட்டேர் தன் நாவலை எழுத ஆரம்பித்தார். பெருகி வரும் சீரழிவை சரிசெய்ய ஒரே ஒரு சக்தியால்தான் முடியும் என்று நம்பினார் வோல்ட்டேர். மனித நேயம். வோல்ட்டேர் தொடுத்ததும் ஒரு வகையில் போர்தான். மனித நேயத்துக்கு விரோதமாக நடந்து கொள்ளும் எவர் ஒருவரையும் அவர் பேனா விட்டுவைக்கவில்லை. கிண்டல். எள்ளல். கடுமை. மூன்றும் கலந்த விநோதமான தாக்குதல் அது. கதாநாயகன் கேண்டீட் ஒரு வெகுளி. ஓர் உயர்குடிப் பெண்ணின் மீது அவன் காதல் கொள்கிறான். சாதாரண மனிதன் எப்படி ஒரு பிரபுவின் பெண்ணைக் காதலிக்கலாம்? திரண்டு வந்த கூட்டம் அவனை அடித்து விரட்டுகிறது. ஊர் ஊராக அலைந்து திரியும் கேண்டீட் மனித சமுதாயத்தின் முரண்பாடுகளை ஒவ்வொன்றாக எதிர்கொள்கிறான்.இந்த நாவல் எழுதப்பட்டு 250 ஆண்டுகள் கழிந்துவிட்டன என்றாலும் நிலைமை இன்று அதிகம் மாறிவிடவில்லை. அதே போர். அதே தனி மனிதத் தாக்குதல். புதர் போல் பெருகிக்கிடக்கும் வெறுப்பு. விரோதம். ஓர் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் கேண்டீடின் கதையை வாசித்துப் பாருங்கள். மனித குலத்தை நேசிக்கக் கற்றுக்கொடுக்கும் அற்புத காவியம் இது.Translated by: Badri Seshadriஇந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் :உளவியல் – 02.04.2009வாரணம் – 02.02.2009Arunprasanna – 09.01.2009
Tags: , வோல்டேர், கேண்டீட்-Candide