மகாகவி பாரதி பற்றிக் கால் நூற்றாண்டு இடைவெளியில் க. கைலாசபதி எழுதிய இக்கட்டுரைகளில் அவரது சீரான பார்வைப் பரிணாமத்தைக் காண முடிகிறது.தமிழ்ப் புலமை, இதழியல், அரசியல், சமூகச் சீர்திருத்தம், ஆன்மிகம் எனப் பன்முகத் துறைகளிலும் தம் தனி முத்திரை பதித்தவர்; கவிஞராக மேலாங்கி மிளிர்ந்தவர் பாரதி.பாரதியை உருவாக்கியதில் அவரது தனித்திறனுக்கு இடமில்லாமலில்லை. ஆனாலும் முந்திய தமிழிலக்கியங்களில் புலமை, வேத உபநிடதங்கள் தொட்டுத் தொடரும் பன்மொழி இந்திய இலக்கிய அறிவு, மேலை – ஜப்பானிய இலக்கியத் திளைப்பு, உலகளாவிய அரசியல் சமூக நிகழ்வுகள், சிந்தனைப் போக்குகளில் ஈடுபாடு முதலிய அனைத்தின் செல்வாக்கும் பாரதியை உருவாக்கியிருக்கின்றன.பாரதி என்னும் பேராளுமையைத் துலக்கிக் காட்டுவது அவ்வளவு எளிதானதல்ல. சற்றேனும் பாரதியை ஒத்த புலமையும் கவிதை உணர்வுநலனும் கொண்டோர்க்கே அது இயலும். அத்தகைய ஆய்வாளுமை கைலாசபதியிடம் இருந்த்தை இந்நூல் காட்டுகிறது.‘பாரதி இயல்’ என்னும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களில் ஆராய்தல், பதிப்பித்தல் முதலியவற்றுக்கும் வழிகாட்டியிருக்கிறார் கைலாசபதி. A collection of articles by Ka. Kailasapathy on Poet Bharathi through a period of twenty-five years. Bharathi was a multifaceted personality, a journalist, politician, who wrote about social reform and spirituality. His impact as a poet was wide-reaching than any poet of his times. It is not an easy job to portray such a personality completely, Ka. Kailasapathy’s poetic and literary sense helps him do the job. In the stream of Bharathi research, Kailasapathy has led new branches and moved conversations many steps ahead.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Bharathi Aaivukal

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹245


Tags: Bharathi Aaivukal, 245, காலச்சுவடு, பதிப்பகம்,