• அதிதி
"இன்று மேம்போக்காகக் காதல் செய்து கொண்டிருக்கும் இளைஞர்களைப் பார்த்திருக்கிறாயா? எல்லோரையும் அப்படிச் சொல்வதிற்கில்லை. அவர்களுக்குப் பதிலாகத்தான் அரசியல் கட்சிகள் காதலைத் தீவிரமாகக் கையாள்கின்றனர். அப்போது நாம் எவ்வளவு தீவிரமாக இருந்திருக்கிறோம் என்பதை நீ மறந்து விட்டிருக்க மாட்டாய். ஒருவேளை நாம்தான் தீவிரமாக இருப்பதுபோல நம்பிக் கொண்டிருந்தோமா? எல்லாம் மாயைதானோ? நொச்சியும் கொஞ்சியும் பூத்துக் கிடந்த காடுமேடெல்லாம் உன்னை அழைத்துக் கொண்டு திரிந்ததெல்லாம் வெறும் இனக்கவர்ச்சி மட்டுமேதானா? சுலபத்தில் மறந்து விடக்கூடிய நாட்களா அவை? நினைக்க நினைக்க மனசு முழுக்க ஆண்டாசெட்டிக் குளத்து இலுப்பைப் பூ வாசம் பெருகி மணக்கிறது அன்பே. இவ்வளவு நாட்களுக்குப் பிறகு இந்த இரவில் ஏன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என்று உனக்குப் புரிகிறதா? எனக்கும்கூடச் சரியான காரணம் எதுவுமே பிடிபடவில்லை. செல்வத்தின் வார்த்தைகள் என் மனத்தை அரித்துக்கொண்டே இருக்கின்ற ன . அது த ா ன் க ாரணமா என்ப தை யு ம் சொல்வதிற்கில்லை. இதேபோன்றதொரு கோடையில்தான் பிரிகிறேன் எனச் சொல்லாமல் நீ நிரந்தரமாகப் பிரிந்து சென்றாய். நீதான் அப்படி நினைத்திருக்கிறாய். எளிமையாக நாம் காதலித்திருந்திருக்கிறோம். தெளிந்த நீரைப்போல அது இருந்தது. சிறு கொய்யாவை நீ கடித்துத் தந்தாய். அதை நான் ஆயிரம் கரங்கள்கொண்டு வாங்கியதை உன் விழிகள் எப்படி ரசித்து உள்வாங்கியன தெரியுமா? ராட்சசி. இப்போது நினைத்தாலும் மனத்தில் சுளுக்கு விழுந்து விடுகிறது."

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அதிதி

  • ₹150


Tags: athithti, அதிதி, காலபைரவன், வானவில், புத்தகாலயம்